ஒரு வழிகாட்டி Jeffersonville, Indiana, USA 62-1014E 1சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. இன்றிரவு நான் சபைக்கு மறுபடியும் வந்துள்ளதைக் குறித்து மகிழ்ச்சியுறுகிறேன். தொண்டை சற்று கரகரப்பாய் உள்ளது. இன்று காலை அளித்த செய்தி சற்று நீண்டது. அது இங்கு அளிக்கப்பட்டதால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதை நானே ரசித்தேன். அதைக் கேட்ட நீங்களும் ரசித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். 2இதை மறந்து விட வேண்டாம். எப்பொழுதும் ஞாபகம் வைத்திருங்கள். இவைதாம் கிறிஸ்துவின் ஊழியனை வளரச் செய்கின்றன. முதலாவதாக விசுவாசம், பின்பு நற்குணம் (virtue; தமிழில் 'தைரியம்' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - 1பேது, 1:5. தமிழாக்கியோன்), இவை ஆவியானவரின் மூலம் கிரியை செய்யாமல் போனால் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய கட்டிடத்தின் மேல் அமர முடியாது. பாருங்கள்? நீங்கள் என்ன செய்த போதிலும், இவை தாம் கிறிஸ்துவின் சரீரத்தை கட்டி வருகின்றன. இதை மறவாதீர். முதலாவதாக விசுவாசம், பின்பு நற்குணம், ஞானம் போன்றவை கூட்டப்பட்டு, முடிவில் கிறிஸ்துவின் பூரண வளர்ச்சி வெளிப்படும்போது, பரிசுத்த ஆவியானவர் அதன் மேல் வந்தும் அதை ஒரே சரீரமாக முத்தரிக்கிறார். இவை அவசியம் இருக்க வேண்டும். ஆகவே தான் இயேசு, அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்றார் (மத்.7:16). பாருங்கள், கனிகள்! இவையில்லாமல் உங்களால் கனி கொடுக்க முடியாது. உலகப் பிரகாரமான காரியங்கள், தேவனுக்கு விரோதமான செயல்கள் போன்றவைகளின் ஸ்தானத்தில் அவை வரும் போது, எல்லா அவிசுவாசமும் போக்கப்படும். அப்பொழுது உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போம், நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகின்றீர்கள். ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' என்று எபேசியர் 4:30 உரைக்கிறது. தேவனுடைய ராஜ்யத்துக்குள் முத்திரிக்கப்படுதல். அதை மறந்து போக வேண்டாம். அதை மனதில் கொள்ளுங்கள் இவைகளை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். அபபொழுது பரிசுத்த ஆவியானவர் நம்மை சரீரத்துக்கள் முத்தரித்துவிடுகிறார். சரி 3இப்பொழுது சிக்காகோவைச் சேர்ந்த சகோதரி லிட்டில்லிடமிருந்து ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. அவள் கணவர் வாகன விபத்திற்குள்ளாகி இப்பொழுது மரணத் தருவாயில் இருக்கிறார். நாம் அநேக நாட்களாய் அறிந்துள்ள சகோதரி ஈடித்ரைட், வீட்டில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். நாம் ஒன்று சேர்ந்து அவர்களுக்காக ஜெபிக்க, இதை சபையில் அறிக்க வேண்டுமென்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்பொழுது சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். 4எங்கள் விலையேறப் பெற்ற பரலோகப் பிதாவே நாங்கள் விசுவாசத்தின் மூலம் தேவனுடைய சிங்காசனத்தை சுற்றிலும் கூடி வந்திருக்கிறோம். இந்த விண்ணப்பங்களுக்காக நாங்கள் தெய்வீக இரக்கத்தைக் கோருகிறோம். சகோ. லிட்டில் கார் விபத்தில் சிக்கி மரணத்தருவாயில் இருக்கிறார். தேவனே. அவருக்குதவி செய்யும். ஆண்டவரே, பரிசுத்த ஆவியானவர் தாமே அவருடைய படுக்கையின் அருகில் இருந்து, மீண்டும் எங்களிடம் அவரைக் கொண்டு வருவாராக! அவ்வாறே ஈடித் ரைட்டின் படுக்கையின் அருகில் பரிசுத்த ஆவியானவர் தாமே இன்றிரவு இருந்து, அவளுக்கு சுகத்தையளிக்குமாறு வேண்டுகிறேன். பிதாவே, இதை அருள்வீராக. இவைகளை நீர் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். நாங்கள் அவைகளை விசுவாசிக்கிறோம். இன்று காலை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தது போல, தூரம் உமக்கு ஒரு பொருட்டல்ல. உலகின் ஒரு பாகத்தில் நீர் எவ்வளவு மகத்துவமுள்ளவராய் இருக்கின்றீரோ, அவ்வளவு மகத்துவமுள்ளவராய் நீர் மறு பாகத்திலும் இருக்கின்றீர். ஏனெனில் நீர் எங்கும் பிரசன்னராயும், சர்வ வல்லமை பொருந்தினவராயும், முடிவற்றவராயும் இருக்கின்றீர். பிதாவே, இவ்விண்ணப்பங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உத்தரவு அருளுமாறு ஜெபிக்கிறோம். ஆமென். 5மறுபடியும் இன்றிரவு இங்கு வந்துள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உஷ்ணமாயுள்ளது என்று எனக்குத் தெரியும், இவை தொடர்ச்சியாக மூன்று கூட்டங்கள். நாளை காலைக்குள் உங்களில் சிலர் 500 மைல்கள் காரோட்டி செல்ல வேண்டுமென்று நானறிவேன். நாளை நான் புறப்பட்டு 1400 மைல்கள் காரோட்டிச் செல்லவேண்டும். உங்கள் எல்லோருக்கும் மகத்தான நேரம் இக்கூட்டங்களில் உண்டாயிருந்தது என்று நம்புகிறேன். உங்களை சந்தித்ததில் எனக்கும் மகத்தான சமயம் உண்டாயிருந்தது. உங்களை நாங்கள் ஒன்று மாத்திரம் கேட்டுக் கொண்டோம். இடமில்லாத காரணத்தால் அநேகரை நாங்கள் வெளியே அனுப்ப வேண்டியதாகிவிட்டது, ஏனெனில் அதிகமான ஜன நெருக்கம் பிரசங்க பீடத்திற்கு செல்லும் வழியில் இருக்கக் கூடாது. தீயணைப்பு துறையினர் அதை அனுமதிக்க மாட்டார்கள். இதைக் காட்டிலும் சற்று விஸ்தாரமான கூடாரத்தைப் பெற நாங்கள் முயன்று வருகிறோம். அதன் பின்பு நாம் உள்ளே வந்தால், ஜனங்கள் உட்காருவதற்கு போதிய இடம் உண்டாயிருக்கும். 6நீங்கள் எந்த நேரத்திலும் கூடாரத்திற்கு வர உங்களை வரவேற்கிறோம். இங்கு எங்களுக்கு கிறிஸ்துவைத் தவிர வேறு பிரமாணம் இல்லை. அன்பைத் தவிர வேறு சட்டமில்லை, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை. எனவே... இங்குள்ள எங்கள் போதகர் சகே. நார்மன் நெவில். இங்குள்ள சபையோர் வெவ்வேறு ஸ்தாபனங்களிலிருந்து இங்கு வந்து கூடும் ஜனங்களைக் கொண்டுள்ளனர். இங்கு நீங்கள் உங்கள் மனச்சாட்சி கட்டளையிடும் விதமாக தேவனை ஆராதிக்க வருகின்றீர்கள். உங்களை இங்கு எப்பொழுதும் வரவேற்கிறோம். எனக்குத் தெரிந்த வரை, அடுத்த முறை உங்களை நான் சந்திக்கப் போவது இந்த கூடாரம் விரிவடைந்து முடிந்த பின்பே. அப்பொழுது, சபை காலங்களுக்கு அடுத்த படியாக ஏழு முத்திரைகளைக் குறித்து நாம் பார்க்கலாம். வெளிப்படுத்தின விசேஷத்தில் காணப்படும் ஏழு முத்திரைகளைக் குறித்து நான் கற்பிக்க விரும்புகிறேன். 7அநேக முறை இக்கூட்டங்களுக்கு வியாதியஸ்தரும் அவதியுறுபவரும் வருகின்றனர். அந்நேரங்களில் தரிசனங்கள் அவசியமாயுள்ளன. சிலர் விசேஷ பேட்டிகளுக்கு வருகின்றனர். அவைகளில் நான் சிரத்தை கொண்டுவிட்டால், அதன்பின்பு பிரசங்கம் செய்வதென்பது எனக்குக் கடினமாகிவிடுகிறது. ஆகவே தான் சுகமளிக்கும் கூட்டங்களில், சகோ பாக்ஸ்டர் அல்லது வேறொருவர் வழக்கமாக பிரசங்கம் செய்து, பின்பு நான் வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்வது நீங்கள் எல்லோரும் அறித்ததே. ஏனெனில் அது மிகவும் பிரயாசமாகிவிடுகிறது. சற்று முன்பு நான் சிலருக்கு ஜெபம் செய்து கொண்டிருந்த போது, ஒரு சிறு குழந்தையைக் கண் டேன். மருத்துவர்கள் அதை கைவிட்டுவிட்டனர்... அது ஏதோ ஒரு முதுகு கோளாறுடன் பிறந்துள்ளது. அந்த குழந்தை எப்பொழுதுமே அந்த ஊனத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. அது சுகமடையப் போகிறது. நிச்சயமாக அது சுகமடையும் என்று எனக்குத் தெரியும். அதைக் குறித்து நான் நிச்சயமுள்ளவனாய் இருக்கிறேன். நமது விசுவாசத்தில் நாம் நிலைகொண்டு தேவனை விசுவாசிக்க நாம் விரும்புகிறோம். 8நீங்கள் ஒவ்வொருவரும் உங்களில் அநேகர் எனக்கு அந்நியர், போதகர்களும் கூட, இது சகோ. கேஸ் என்று நினைக்கிறேன். அது சரியா? சகோ. கேஸ், உங்கள் பிரதிஷ்டை ஆராதனைக்கு வர முடியாமைக்கு உங்களிடம் மன்னிப்புகோர வேண்டியவனாயிருக்கிறேன். வார இறுதி கூட்டம் ஒன்றிற்கு அங்கு வரலாமென்று நினைக்கிறேன். அது சரியாயிருக்குமா? அது ப்ளூமிங்டனில். நீங்கள் நன்றாயிருக்கிறீர்களா? நல்லது. இங்குள்ள சில சகோதரர்கள் போதகர்கள் என்று கருதுகிறேன். நீர் போதகரா? ஆம், ஐயா. கர்த்தர் உம்மை ஆசிர்வதிப்பாராக. இந்த கட்டிடத்தில் எத்தனை போதகர்கள் உள்ளனர்? கையுயர்த்துங்கள் பார்க்கலாம்! மிகவும் நல்லது. நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. தேவன் உங்களை எப்பொழுதும் ஆசிர்வதிப்பாராக 9நாம் வேகமாக முடிக்க வேண்டும். சிலர் இன்றிரவு புறப்பட்டு ஜார்ஜியா, டென்னசி, நியூயார்க் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். நெடுஞ்சாலையில் மிகவும் கவனமாக காரோட்டிச் செல்லுங்கள். உங்களுக்கு உறக்கம் வந்து, நீங்கள் விடுதிக்கு செல்ல விரும்பாமல் போனால், சாலையைத் தள்ளி காரை நிறுத்தி களைப்பு தீரும் வரை உறங்குங்கள் நான் அப்படித் தான் செய்வது வழக்கம். உங்களுடைய உறக்க நிலையில் காரோட்டிச் செல்லவேண்டாம். அது மிகவும் கெட்டது. நீங்கள் கவனிக்க வேண்டியது. உங்களையல்ல. உங்கள் பக்கத்தில் காரோட்டி செல்பவனின் மேல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பாருங்கள்? நீங்கள் எங்கு போக வேண்டுமென்று அறிந்திருக்கிறீர்கள். ஆனால் அவன் எங்கு போகிறான் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நீங்கள் அவன் மேல் கவனம் செலுத்த வேண்டும். எந்நேரமும் நீங்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருங்கள். 10இப்பொழுது பரி, யோவான் சுவிசேஷத்திலிருந்து ஒரு பாகத்தை இன்றிரவு வாசிக்க விரும்புகிறேன். நாம் படித்து, குறிப்பிடும் இச்சிறு வேதவாக்கியங்கள் நாம் கூற முயல்வதற்கு ஆதாரமாக அமைந்திருக்கும். ஒரு முறையாவது நான், ஏதோ பேச வேண்டுமே என்னும் எண்ணத்துடன் பிரசங்க பீடத்திற்கு வந்தது கிடையாது. நான் எப்பொழுதுமே தேவனுடைய சமுகத்தில் காத்திருந்து, கவனித்து படித்து, ஜெபித்து, ஜனங்களுக்கு உதவியாக இருக்க கூறுவதற்கு ஒன்று எனக்குக் கிடைத்துவிட்டது என்னும் உணர்வு எனக்குள் தோன்றும் வரை அப்படி செய்வேன். நான் உதவியாக இருக்க முடியாவிட்டால், இங்கு நான் நின்று கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமது கூட்டத்தில் பெரும்பாலார் இன்று காலையிலேயே புறப்பட்டுவிட்டனர். அநேகருக்கு வீடு திரும்ப வேண்டிய அவசியமிருந்தது. நீங்கள் இன்றிரவு தங்கினால், நமக்கு உதவியாயிருக்க சுமார் நாற்பத்தைந்து நிமிடம் ஒரு பிரசங்கம் செய்யலாம் என்று ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன். இந்த பிரசங்கத்திற்கு ஆதாரமாக நாம் பரி. யோவான் சுவிசேஷம் 16-ம் அதிகாரத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறோம். நாம் 7ம் வசனம் தொடங்கி 15ம் வசனம் முடிய வாசிக்கலாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போகிறது. உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; (He will guide you into all truth) அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதனாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். யோவான்16: 7-15 11இப்பொழுது 13ம் வசனம்: சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். “சத்தியம் என்பது என்ன? தேவனுடைய வார்த்தை. அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லுவார்.” வேறு விதமாகக் கூறினால், அவர் காரியங்களை வெளிப்படுத்துவார். எபிரேயர் 4-ம் அதிகாரத்தில், ''தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது. (எபி 4: 12.) ''அவர் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.“ பாருங்கள்? யார் அவ்விதம் செய்வார்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வரும் பரிசுத்த ஆவியானவர். 12இந்த அடுத்த சில நிமிடங்கள், வழிகாட்டி (Guide) என்னும் வார்த்தையின் பேரில் உங்கள் கவனத்தை நீங்கள் செலுத்த வேண்டுமென்று விரும்புகிறேன். ''வழி காட்டி''. எனக்கு காடுகளில் சிறிது அனுபவம் உண்டு. உங்களுக்கு சுற்றிக்காட்ட வழிகாட்டி ஒருவர் தேவை. நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்று அறியாமலிருந்தால், உங்களுக்கு ஒரு வழிகாட்டி அவசியம். எனக்கு உலக முழுவதிலும் வேட்டையாடின, அனுபவம் உள்ள காரணத்தால், வழிகாட்டிகளை சந்திக்கத் தருணம் கிடைத்தது. கொலராடோவில் நானே ஒரு வழிகாட்டி. ஏனெனில் கொலராடோ முழுவதும் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே கொலராடோவில் என்னால் வழிகாட்ட முடியும். 13ஒரு வழிகாட்டிக்கு வழி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவன் எங்கு செல்கிறான் என்றும், என்ன செய்கிறான் என்றும், உங்களை வழியில் எவ்விதம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவன் நன்கு அறிந்திருக்க வேண்டும். பாருங்கள்? ஏனெனில் நீங்கள் வழிதவறாதபடிக்கு அவன் உங்களை கவனமாய்ப் பார்த்துக் கொள்ளவேண்டும். வழிகாட்டி அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நீங்கள் காட்டில் செல்ல வேண்டுமானால், வழிகாட்டியில்லாமல் தனியாய் போவது நல்லதல்ல. கனடா போன்ற இடங்களில், நீங்கள் தனியாய் போகவே முடியாது. வழிகாட்டி காட்டு அதிகாரிகளிடம் கையொப்பமிட்டு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும், உங்களுக்கு ஆபத்து ஏதாகிலும் நேரிட்டால் அவன் உத்திரவாதமுள்ளவனாயிருப்பான். அவன் உங்களைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் கானாமற் போகாமலிருக்க அவன் உங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் எங்காவது சென்று, திரும்பி வர உங்ககளுக்கு வழிதெரியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக அவன் உங்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் காணாமற் போய்விட்டால், உங்களை எந்த நேரத்திலும் தேடிக் கண்டு பிடிக்க அவன் தேசத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். இவைகளை அவன் அறியாமல் போனால், அவன் வழிகாட்டியாய் இருக்க முடியாது. அவன் வழிகாட்டியாய் இருப்பதற்கு அவனுக்கு 'லைசென்ஸ்' கொடுக்கப்படமாட்டாது. நீங்கள் காட்டினுள் செல்ல வேண்டுமானால், நீங்கள் முன்கூட்டியே ஆட்களைச் சந்தித்து. உங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். சில நேரங்களில், ஏற்கனவே மற்றவர்கள் இந்த உலக வழிகாட்டியிடம் பதிவு செய்திருக்கும் காரணத்தால், நீங்கள் குறித்த நாளில் செல்ல முடியாதபடிக்கு பயணத்தை தள்ளிப்போட நேரிடும். ஆனால் வழிகாட்டியாகிய தேவனிடம் அத்தகைய நிலை ஏற்படாது. அவர் எப்பொழுதுமே உங்களைக் கொண்டு செல்ல ஆயத்தமாயுள்ளார். 14நீங்கள் இப்படிப்பட்ட ஆயத்தங்களையெல்லாம் செய்யாமல், முன் சென்றிராத ஒரு காட்டில் பயணம் மேற் கொண்டால், நீங்கள் காணாமற் போய் அழிந்து போக நேரிடும். நீங்கள் செல்லும் காடு மிகவும் அடர்த்தியாயிருக்குமானால், நீங்களாகவே பாதுகாப்பாக திரும்ப வருவதற்கு 1 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது எனலாம். ஆனால் அது பயங்கரமான காடாக இருக்குமானால், உங்களால் திரும்பி வரவே முடியாது. நீங்கள் மரணபாதையை அடைந்து, அதுவே உங்கள் முடிவாக இருக்கும். தேசத்தை நன்கு அறிந்துள்ள வழிகாட்டி உங்களுக்கு இராமற் போனால், நீங்கள் திரும்பி வர முடியாமல் அங்கேயே அழிந்து போவீர்கள். 15கடந்த ஆண்டில் அரிசோனாவிலுள்ள டூசானில், அந்த சாரணர் குழுவிற்கு என்ன நேர்ந்ததென்று நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சாரணர்.அவர்கள் மலைகளுக்கு சென்றிருந்தபோது, பனிப்புயல் (Snowstorm) தோன்றியது. அப்பொழுது இயற்கை தன் நிலையை மாற்றிக் கொண்டது. அவர்கள் காணாமற்போய் அழிந்து போன காரணம் என்னவெனில், வழக்கமான சூழ்நிலையிலிருந்து ஒரு மாறுதல் ஏற்பட்டபோது, அதனின்று தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை. பாருங்கள்? மலையில் எத்தனை பேர் மாண்டனர் என்று எனக்கு ஞாபகமில்லை. அவர்களுக்கு ஹெலிகாப்டர், இராணுவம், தேசிய பாதுகாவலர், தொண்டர் படை போன்றவரின் உதவி இருந்த போதிலும், அவர்கள் காணாமற் போயினர். அவர்கள் சென்ற இடம் யாருக்குமே தெரியவில்லை. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களால் இயலவில்லை. அவர்கள் பனியில் மாண்டுபோயினர். ஏனெனில் அவர்கள் கிழக்கு திசை செல்கின்றனரா, அல்லது வடக்கு, மேற்கு, தென்திசை செல்கின்றனரா, அல்லது மேலே செல்கின்றனரா கீழே செல்கின்றனரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எல்லாமே அவர்களுக்கு ஒரே போல் தோன்றினது. 16ஆனால் ஒரு வழிகாட்டிக்கு, வான்நிலை எதுவாயிருப்பினும் அவன் எங்கிருக்கிறான் என்று தெரியும். அதற்கென்று அவன் பயிற்சி பெற்றிருக்கிறான். அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்குத் தெரியும், அவனுக்கு எல்லாமே நெருங்கிய பழக்கமுண்டு. ஒவ்வொன்றும் எவ்வாறு காணப்படும் என்று அவன் அறிந்திருக்கிறான். ஆகையால் இருட்டிலும் கூட அவன் இருக்கும் இடம் எதுவெனும் உணர்வு அவனுக்கு ஏற்படும். வழிகாட்டி கடைபிடிக்கும் வழிமுறை இதுவே, நீங்கள் நட்சத்திரங்களைக் கவனித்துக் கொண்டே வந்தால், நீங்கள் எந்த திசையில் செல்கின்றீர்கள் என்று சொல்லிவிடலாம். நீங்கள் எப்பொழுதும் ஒரே நட்சத்திரத்தை... கவனிக்க விரும்புவீர்கள். அது தான் வடக்கு நட்சத்திரம். அது ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. அது நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயுள்ள இயேசு கிறிஸ்துவுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது. மற்றவை வெவ்வேறு திசைகளில் திரியும், ஆனால் இது மாத்திரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும். சபைகள் உங்களை இந்த திசைக்கும் அந்த திசைக்கும் இழுத்துச் செல்லக் கூடும். ஆனால் அவர் அப்படி செய்வதில்லை. அவர் எப்பொழுதுமே மாறாதவராயிருக்கிறார். 17மேகமூட்டம் காரணமாக உங்களால் வடக்கு நட்சத்திரத்தைக் காணமுடியாமற் போனால், அது பகல் நேரமாயிருந்து நீங்கள் வழிதப்பிப் போயிருந்தால், நீங்கள் மரங்களை கவனிக்க வேண்டும். பாசி மரங்களின் வடபாகத்தில் காணப்படும். ஏனெனில் மரத்தின் தென்பாகத்தில் வடபாகத்தைக் காட்டிலும் அதிக வெளிச்சம்படுகின்றது. ஒருக்கால் அங்கு இருட்டாயிருந்து உங்களால் பாசியைக் காண முடியாமற் போனால் என்ன செய்வீர்கள்? உங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நீங்கள் வேறு எதை குறித்தும் யோசனை செய்யக்கூடாது. நீங்கள் மெல்ல நகர்ந்து நல்ல பட்டையுள்ள மரத்தைக் கண்டு பிடிக்கவேண்டும். உங்கள் கைகளை அதை சுற்றிலும் போட்டு உங்கள் விரல்கள் சந்திக்கும்படி செய்ய வேண்டும். பின்பு நீங்கள் மெல்ல மரத்தைச் சுற்றி வரவேண்டும். பட்டை எங்கு கனமாக உள்ளதோ, அது தான் வடபாகம், அப்பொழுது நீங்கள் வடதிசை செல்கின்றீர்களா அல்லது தென் திசை செல்கின்றீர்களா என்று கூறிவிடலாம். இவ்வாறு அநேக முறைகள் உள்ளன. ஒரு வழிகாட்டிக்கு இவ்வழிமுறைகள் அனைத்தும் தெரியும். சாதாரண மனிதன், ''எனக்கு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லையே“ எனலாம். பாருங்கள்? நீங்கள் வழிகாட்டியாக வேண்டுமென்றால், அதற்கான பயிற்சி பெற வேண்டும். 18இந்த பையன்கள் மிகவும் அருமையான சாரணரே. அவர்களுக்கு கயிற்றில் முடி போட தெரிந்திருந்தது. பாறையை உறைத்து தீ உண்டாக்க அவர்களுக்குத் தெரியும். ஆனால் வழி தப்பின அவர்களுக்கு அதிலிருந்து வெளிவர தெரியவில்லை. வழிகாட்டியை அவர்களுடன் அழைத்துச் செல்லாததனால், அவர்கள் அனைவரும் அழிந்து போயினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலராடோவைச் சேர்ந்த யோசனையில்லாத ஒரு தந்தை, ஆறு அல்லது ஏழு வயதான தன் மகனை கூட்டிக் கொண்டு மான் வேட்டையாட மலையின் மேலேறினான். அந்த பையன் மான் வேட்டைக்குச் செல்வது அதுவே முதல் தடவை. அவர்கள் உயர மலையின் மேல் சென்றனர். அச்சிறு பையன் தந்தையிடம், ''எனக்கு களைப்பாயிருக்கிறது“ என்றான். 19தந்தை அவனிடம், ''என் முதுகில் ஏறிக் கொள் நான் இன்னும் உயரே செல்ல வேண்டும். உயரத்தில் தான் மான்கள் உள்ளன'' என்றான். அவனுக்கு வேட்டையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. காடுகளைக் குறித்து அறியும் மனிதன் எவனும், மான்கள் உயர் இருக்க முடியாதென்று அறிவான். மான்கள் உயரே செல்வதில்லை. வெள்ளாடுகள் தான் உயர தங்கும், மான்கள் அல்ல. தீனி உண்ண மான்கள் கீழேதான் இருக்க வேண்டும். உண்பதற்கு தீனி கிடைக்கும் இடத்தில் தான் அவை இருக்க வேண்டும். ஆனால் இந்த மனிதனோ, அந்த பாறைக்குச் சென்றால், ஒரு பெரிய மான் கிடைக்கும் என்று எண்ணினான். பாறையின் மேல் மான் நிற்பது போன்ற படம் ஒன்றை அவன் பார்த்திருக்கிறான். எனவே, அங்கு சென்றால் மான் கிடைக்கும் என்று அவன் எண்ணினான். இந்த பத்திரிகைகள் வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டாம். உங்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும். நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, உங்களுடன் வழிகாட்டியை அழைத்துச் செல்வதே. 20அந்த தந்தை, இங்கு திடீரென்று மழை பெய்யத் தொடங்கினது, அடிக்கடி வரும் திடீர் மழைகளில் ஒன்று. இருட்டாகும் வரை அந்த மனிதன் வேட்டையாடினதால், திரும்பி வர அவனுக்கு வழி தெரியவில்லை. அவன் வேகமாக இறங்கிவந்தான். அதே சமயத்தில் காற்றும் மலை உச்சியில் பயங்கரமாக அடிக்கத் தொடங்கினது... இவ்வாறு நீங்கள் மாட்டிக் கொண்டால், எப்படி உயிர் தப்புவதென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும். என் உயிரைக் காத்துக்கொள்ள, நான் மரத்தின் மேலேறி கீழே வழுக்கிக் கொன்டு வருவதும், மறுபடியும் மரத்தின் மேலேறி கீழே வழுக்கிக் கொண்டு வருவதும், இப்படியாக மேலும் கீழுமாக சென்றிருக்கிறேன். சில சமயங்களில், நாலு அடி கனத்திற்கு இரு புறமும் பனி பெய்திருக்கும். நான் கொம்புகளை வெட்டி கீழே அடுக்கிவிடுவேன். தாள முடியாமல் எனக்குப் பசி எடுக்கும். நான் கொம்புகளுக்கு தீ மூட்டி ஃபானியை உருக வைப்பேன். பின்பு காலை 1 மணி, 2 மணியளவில் கொம்புகளை உருவி, சூடான தரையில் படுத்திருக்கிறேன். என் உயிரைக் காக்க இப்படியெல்லாம் செய்திருக்கிறேன். இவைகளையெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 21ஆனால் இந்த மனிதனுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனுக்கு சொல்லிக் கொடுக்க அவனுடன் யாருமில்லை. அவன் மகனை அணைத்துக் கொண்டான், மகன் குளிரில் விரைத்து, தந்தையின் கரங்களில் மரித்துப் போனான். யோசனையில்லாதவன். அவன் மாத்திரம் அவனுடன் ஒரு வழி காட்டியை அழைத்துச் சென்றிருந்தால், அது என்ன நேரமாயிருந்தாலும், உயிருடன் தன் மகனைக் கொண்டு வந்திருப்பான். அவனோ இருட்டாகும் வரை காத்திருந்தான். அதனால் அவனுக்கு வழி தெரியாமற் போயிற்று. இன்றைய கிறிஸ்தவர்களிடையேயும் அது தான் தொல்லை. அவர்கள் இருட்டாகும் வரை காத்திருந்து, அதன் பின்பு அவர்களுடன் வழிகாட்டி இல்லாததை உணருகின்றனர். வழிகாட்டி! 22வழி தவறிப் போன மனிதன் ஒருவனை நீங்கள் எப்பொழுதாகிலும் கண்டதுண்டா? வழிதவறிப் போன மனிதன் ஒருவனை மீட்டு மீண்டும் கொண்டுவரும் அனுபவம் உங்கள் யாருக்காகிலும் உண்டா? காண்பதற்கு அது மிகவும் பரிதாபமாக இருக்கும். ஒரு மனிதன் வழி தவறும் போது அவன் காட்டு மனிதத் தன்மையை அடைந்துவிடுகிறான். அவன் செய்வது என்னவென்று அவனுக்கே தெரியாது காட்டில் வழி தவறிப் போன ஒரு பையனை நாங்கள் ஒரு முறை கண்டு பிடித்தோம். அவன் குதிரை, மாடு மந்தைகளைக் கண்காணிப்பவன் (Rancher). அவன் தவறான எல்லைக்குள் சென்று அங்கு காணாமற் போய்விட்டான். மூன்று நாட்களுக்குப் பின்பு அவனைக் கண்டு பிடித்தபோது, அவன் காட்டு மனிதனைப் போல் பயங்கரமாக கூச்சலிட்டு ஓடத் தொடங்கினான். அவனுடைய உதடுகள் தின்று போயிருந்தன. அவன் துப்பாக்கியை எறிந்துவிட்டான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் அவனைப் பிடித்து கட்டிப்போட வேண்டியதாயிற்று. அவனுடைய கூடப் பிறந்த சகோதரன் அவனிடம் வந்த போது, அவன் மிருகத்தைப் போல் பாய்ந்து அவனைக் கடித்துவிட்டான். அவன் எங்கிருக்கிறான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. ஏன்? அவன் காணாமற் போகும் போது. அவன் கலக்கமடைகிறான். அவன் அந்நிலையில் உள்ளதை அறியாமலிக்கிறான். ஏனெனில் அவன் காணாமற் போய்விட்டான் என்னும் எண்ணம் அவனுக்கு ஒரு விதமான பயத்தை அளித்துவிடுகிறது. அவன் எங்கிருக்கிறான், என்றும் எப்படி நடந்து கொள்கிறான் என்றும் அவனுக்குத் தெரிவதேயில்லை. 23அவ்வாறே தான் தேவனுடைய சமூகத்திலிருந்து காணாமற் போன மனிதனும் இருக்கிறான். அவன் சாதாரண நிலையிலுள்ள போது செய்யாத காரியங்களை அப்பொழுது செய்கிறான். மனித கருத்துக்களுக்கு அப்பாற்பட்ட செயல்களை அவன் புரிகிறான். தேவனிடமிருந்து காணாமற் போன மனிதன்; தேவனிடமிருந்து காணாமற் போன சபை; தேவனை விட்டு அகன்று போன சபை; தேவனுடைய வேதாகமத்தின் கொள்கைகளிலிருந்து அகன்று போன சபை புரியும் செயல்களை ஜீவனுள்ள தேவனுடைய சபையில் காண நீங்கள் எதிர் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட சபை பங்கோ (bunco) சூதாட்டத்தினாலும், லாட்டரியினாலும், தங்கள் பணத்தை சம்பாதிப்பார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் போதிப்பார்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் கண்டிக்காமல் விட்டுவிடுவார்கள். சபைக்கு அதிகமாக பணம் கொடுப்பவர்களை அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்து அவர்கள் செய்யும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். அது உண்மை. மூன்று, நான்கு முறை விவாகம் செய்தவர்களை அவர்கள் சபையின் மூப்பர்களாக நியமிப்பார்கள். நீங்கள் நிறைவேற்ற வேண்டிய ஒன்றுண்டு. அது தான் நீங்கள் தேவனுக்கு செய்ய வேண்டிய கடமை. நீங்கள் உறுதியாய் நின்று, சத்தியத்தை எடுத்துக் கூறுங்கள். காணாமற்போன மனிதன் கலக்கமுற்ற நிலையில் இருக்கிறான். அவன் ஒரு பைத்தியக்கார நிலையை அடைகிறான். 24ஒரு வழிகாட்டி எப்படி போக வேண்டுமென்றும் என்ன செய்ய வேண்டுமென்றும் நன்கு அறிந்திருக்கிறான். தேவன் ஒவ்வொரு காலத்திலும் ஒரு வழிகாட்டியை தமது ஜனங்களுக்கு அனுப்பித் தந்திருக்கிறார். அப்படிச் செய்ய அவர் ஒரு முறை கூட தவறியதில்லை. அவர் வழிக்காட்டியை அனுப்புகிறார். ஆனால் அந்த வழிக்காட்டியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாருங்கள். அவரை நீங்கள் நம்ப வேண்டும், அவர் போகக் கூறும் வழியில் நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் காட்டுக்குள் சென்று, உங்கள் வழிகாட்டி, ''நாம் இவ்வழியில் செல்லாம்“ என்று கூறும் போது. நீங்கள் வேறு வழியில் செல்ல எண்ணினால், நீங்கள் நிச்சயம் வழி தப்பிவிடுவீர்கள். அப்பொழுது நீங்கள் நம்மை வழி நடத்த தேவன் ஒரு வழிக்காட்டியை அனுப்பும் போது, நாம் வழிகாட்டியை பின் தொடர வேண்டும். நாம் அதை குறித்து என்ன நினைத்தாலும், நமக்கு அது நியாயமாகத் தென்படாமல் கேலியாகத் தென்பட்டாலும், நாம் அதை தீர்மானிக்கக் கூடாது. வழிகாட்டி மாத்திரமே அதை தீர்மானிக்க வேண்டும். 25பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார். அவர்கள் வழிகாட்டிகளாயிருந்தனர். ஏனெனில் தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வந்தது. அவர்கள் வழிகாட்டிகள். சென்ற இரவு நாம் ஏசாயா, உசியா இவர்களைக் குறித்து சிந்தித்தோமே, அது போன்று அவர்கள் ஜனங்களுக்குப் போதனை செய்தன. அவர்கள் ஜனங்களுக்குப் போதனை செய்து அவர்களை வழிநடத்தினர். தேவன் எல்லா காலங்களிலும் தமது வழிகாட்டிகளை அனுப்பியிருக்கிறார். காலங்கள்தோறும் அவர் வழிகாட்டிகளை அனுப்பாமல் இருந்ததில்லை. எல்லா காலங்களிலும் தேவன் தமது பிரதிநிதியாக யாரையாவது ஒருவரை பூமியில், எல்லா காலங்களிலும் வைத்திருந்தார். சில சமயங்களில் ஜனங்கள் வழிகாட்டியை விட்டு அகன்று சென்றனர். இயேசு இவ்வுலகில் இருந்தபோது அவர் பரிசேயர்களை 'குருட்டு வழிகாட்டிகள்' என்று அழைத்தது ஞாபகமுள்ளதா? குருட்டு வழிகாட்டிகள். ஆவிக்குரிய விஷயங்களுக்கு அவர்கள் குருடர்கள் பாருங்கள்? அவர்கள் ஜனங்களை இரட்சிப்புக்குள் வழிநடத்த வேண்டியவர்கள். ஆனால் இயேசுவோ அவர்களைப் பார்த்து, ''நீங்கள் குருடர்கள்“ என்றார். அவர், ”அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள், குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே'' என்றார். (மத். 15:14). குருட்டு வழிகாட்டிகள்! ஓ, குருடர்கள் வழி காட்டுவதனால் இவ்வுலகம் எவ்வளவாக கறைபட்டுள்ளது! உங்கள் சுயபுத்தியின் மேல் நீங்கள் சாய்வதை அவர் விரும்புகிறதில்லை. உங்கள் சுயபுத்தியின் மேல், அல்லது சிந்தனைகளின் மேல், அல்லது மனிதரின் கருத்துக்களின் மேல் நீங்கள் சாருவதை அவர் விரும்பமாட்டார். 26தேவன் ஒரு வழிகாட்டியை அனுப்பகிறார். அது அவர் நியமித்த வழிகாட்டி என்பதை நீங்கள் நினைவு கூர வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ''இயேசு நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன். அப்பொழுது வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்'' என்றார். (யோவான் 14:18,16). இந்த தேற்றரவாளன் வரும் போது, அவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார். தேவனுடைய வார்த்தையே சத்தியம் கிறிஸ்துவே வார்த்தை. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்''. அவரே வார்த்தை. ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்''. நாம் பரிசுத்த ஆவியாகிய உண்மையான வழிகாட்டியைப் பின்பற்றினால், அவர் கண்டவைகளையும், கேட்டவைகளையும் நமக்கு சொல்லி, வரப்போகிற காரியங்களை நமக்கு அறிவிப்பார். ஆமென். பார்த்தீர்களா? வரப்போகிற காரியங்களை அவர் உங்களுக்கு அறிவிப்பார். இன்றைய சபைகள் அதைப் புறக்கணிக்கும் போது, பரலோகத்துக்குச் செல்ல அவர்கள், எப்படி எதிர்பார்க்கலாம்? நமக்கு வழிகாட்டியாக இருக்க பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டிருக்கும் போது, நம்மை வழிநடத்த நாம் கார்டினல், பேராயர், பொது மேற்பார்வையாளர் போன்றவர்களை நாம் தெரிந்து கொள்கிறோம். 27பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதுமே வார்த்தையைக் குறித்தே பேசுவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்ளமாட்டீர்கள். அவர் வரும் போது, ''அவர் உங்களை அதற்குள் நடத்துவார்.'' அது தான் முத்திரைகளின் இரகசியம் வெளிப்படுவதன் காரணம். ஏழாம் முத்திரை முடிவு பெறும் போது, தேவ ரகசியம் நிறைவேறி, தேவன் யாரென்றும் அவர் என்னவாயிருக்கிறார் என்றும் அவர் எப்படி ஜீவிக்கிறார் என்றும், அவர் தன்மை என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். அப்பொழுது நீங்கள் இவைகளையெல்லாம் கடந்து வந்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, கிரயத்தினால் கொள்ளப்பட்ட சபையாக, தேவனுடைய குமாரர், குமாரத்திகள் என்னும் பரிபூரண வளர்ச்சியை அடைகின்றீர்கள். 28வழிகாட்டி, அவர் தேவனால் அளிக்கப்பட்ட வழிகாட்டி. நாம் காட்டினுள் ஒரு இடத்தை அடைய பாதையின் வழியாக சென்று கொண்டிருக்கிறோம். வழிகாட்டியில்லாமல் தம்மால் செல்ல முடியாது. அவன் அளித்த வழிகாட்டிக்கு பதிலாக வேறொரு வழிகாட்டியைத் துணிந்து நியமித்து பாருங்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் அவர் உங்களை பாதையினின்று விலக்கிவிடுவார். அவர் அளித்துள்ள வழிகாட்டிக்கு மாத்திரமே வழி நன்றாகத் தெரியும். வழியின் எல்லா நுணுக்கங்களும் அவருக்குத் தெரியும். உங்கள் இருதயத்திலுள்ள ஒவ்வொரு சிந்தனையையும் அவர் அறிவார். இங்குள்ள ஒவ்வொருவரையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். நீங்கள் யாரென்றும், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும் உங்களைக் குறித்து எல்லாமே அவர் அறிவார். அவர் தேவனால் அனுப்பப்பட்ட வழிகாட்டி. பரிசுத்த ஆவியானவர். அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்தி, அவர் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்து, நீங்கள் முன்பு கூறின வார்த்தைகளை பிசகாமல் அப்படியே மறுபடியும் உரைக்கக் கூடியவராயிருக்கிறார். ஆமென். நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றும், உங்களிடம் என்ன உள்ளது என்றும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் அவர் கூறுவார். அவர் சரியான வழிகாட்டி. அவர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவருடைய வசனமே சத்தியம். 29பரிசுத்த ஆவியானவர் மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு 'ஆமென்' என்று சொல்லமாட்டார். தேவனுடைய வார்த்தைக்கு மாத்திரமே அவர் 'ஆமென்' என்றுரைப்பார். ஏனெனில் தேவனுடைய வார்த்தை மாத்திரமே அவ்வாறு உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களை வேறு வழியில் நடத்தி செல்லமாட்டார். விசித்திரமான காரியம் என்னவெனில், நாமெல்லாருமே நமது பெரிய ஸ்தாபனங்கள் அனைத்துமே பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துவதாக உரிமை பாராட்டுகிறோம். ஆயினும் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு போன்று அவைகளிடையே அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. 30ஆனால் அந்த சிறிய பரிசேயனாகிய பவுல், அனனியாவிடம் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு அரேபியாவுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் அங்கு தங்கி திரும்பி வந்த பின்பு பதினான்கு ஆண்டுகளாக சபையிடம் ஆலோசனை எதுவும் கேட்கவில்லை. அவன் எருசலேமிலிருந்த சபைக்குத் தலைவனான பேதுருவை சந்தித்த போது, அவர்களுடைய போதனைகளில் எவ்வித வித்தியாசமுமின்றி ஒன்றுக்கொன்று ஒத்திருந்தன. ஏன்? அதே பரிசுத்த ஆவி! பேதுரு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். பவுலும், யாரும் அவனிடம் கூறாமலே, அதே முறையில் ஞானஸ்நானம் கொடுத்தான். பேதுரு பரிசுத்த ஆவியின் அபிஷேகம், பரிசுத்தமாக்கப்படுதல் இவைகளைப் போதித்து வந்தான். பவுலும் சபையை எவ்வித ஆலோசனையும் கேட்காமலே, அவைகளையே போதித்தான். ஏனெனில் அவர்களிருவருக்கும் வழிகாட்டி ஒருவரே. அப்படியிருக்க, இன்று சத்தியத்தை மறுதலிக்கும் ஜனங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் எப்படி வழிகாட்டியாக இருக்க முடியும்? சபையை சீர்பொருந்தப் பண்ண பேதுரு என்ன போதித்தானோ பவுலும் அதே போதனையைக் கொண்டவனாயிருந்தான். ஏனெனில் இருவருக்கும் ஒரே வழிகாட்டி இருந்தார். 31வழிகாட்டி ஒருவன் ஒருவனை இந்த பக்கமாகவும் வேறொருவனை அந்த பக்கமாகவும், ஒருவனை கிழக்கு திசைக்கும் மற்றவனை மேற்கு திசைக்கும் வழிநடத்த மாட்டான் உங்கள் எல்லோரையும் அவன் ஒன்று சேர்த்து ஒரே வழியில் நடத்திச் செல்வான். அது போன்று, நம்மை ஒன்று சேர்க்க நாம் பரிசுத்த ஆவியானவரை அனுமதிப்போமானால், நாமெல்லாரும் ஒன்றாகவே இருப்போம். நம்மை தவறான பாதையில் இழுத்துச் செல்ல நாம் பிசாசுக்கு விட்டுக் கொடுக்காமலிருந்தால், நாமெல்லாரும் ஒரே இருதயமும் ஒரே சிந்தையும் கொண்டவர்களாய், ஒரே ஆவியினால் ஒருமனப்பட்டவர்களாய் இருப்போம். அந்த பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வழிகாட்டி. நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். அது உண்மை. ஆனால் நீங்கள் வழிகாட்டியை பின்பற்ற வேண்டும். ஆம், ஐயா! 32நிக்கொதேமுவைப் பாருங்கள். அவனுக்கு வழி காட்டி தேவையாயிருந்தது. ஆயினும் அவன் அறிவாளி அவனுக்கு எண்பது வயது நிரம்பியிருந்தது. அவன் ஒரு போதகன். அவன் பரிசேயன், சனகரீப் சங்கத்தை சேர்ந்தவன், போதகர் குழுவில் ஒரு அங்கத்தினன். அவன் அவர்களுடைய தலைசிறந்தவர்களில் ஒருவன், இஸ்ரவேலில் ஒரு போதகன், அதில் நிபுணன். சற்று யோசித்துப் பாருங்கள் சிறந்த ஒரு போதகன்! அவன் பிரமாணங்கள் அனைத்தும் நன்கு கற்றவன். ஆயினும் மறுபடியும் பிறக்க வேண்டுமெனும் விஷயத்தில் அவனுக்கு ஒருவழிகாட்டி தேவையாயிருந்தது. அவன் அதற்காக பசியாயிருந்தான். வித்தியாசமான ஒன்று இருக்க வேண்டுமென்று அவன் உணர்ந்திருந்தான். அவன் கிறிஸ்துவினிடம் அன்றிரவு தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தின போது, அது ருசுவானது. அது தன்னுடன் கூட இருந்த மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது. ஆனால் இவனுக்கிருந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை. அவன் செய்த விதமாக மற்றவர்களும் செய்ய அவர்களுக்குப் போதிய துணிச்சல் இல்லை. நிக்கொதேமு இரவில் இயேசுவினிடம் வந்தான் என்று ஜனங்கள் அவனைக் குற்றப்படுத்துகின்றனர். அவன் புறப்பட்டு இரவு நேரத்தில் வந்தான் என்பது உண்மையே. ஆனால் சிலர் இரவில் மாத்திரமல்ல, பகலிலும் புறப்படுவதேயில்லை. அவன் புறப்பட்டு அங்கு அடைந்தான். அவனுக்கு ஒரு வழிகாட்டி தேவையாயிருந்தது. அவன், ''ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் (சனகரீம் சங்கத்தாராகிய நாங்கள்) அறிந்திருக்கிறோம் என்று (பன்மையில்) கூறினான். அவன் எப்படி அதை அறிந்து கொண்டான்? அவர் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தார். பாருங்கள், மறுபடியும் பிறத்தலின் அர்த்தத்தை அவன் அறிந்து கொள்ள விரும்பினான். அவன் சரியானவரிடத்தில் சென்றான். ஏனெனில் இயேசுவே அவனுடைய வழிகாட்டியென்று தேவன் உறுதிபடுத்தியிருந்தார். அவன் என்ன கூறினான் என்று பாருங்கள். ''ரபீ , நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால், நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்''. 33ஜீவனுள்ள தேவன் இயேசுவுக்குள் வாசமாயிருந்தார் என்று அங்கு உறுதியானது. இயேசுவின் சாட்சியைக் கேளுங்கள். நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை, என்னில் வாசமாயிருக்கிற பிதாவே இவைகளைச் செய்கிறார். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். (யோவான் 5:19). வேறு விதமாகக் கூறினால், அவர் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவருக்குக் காண்பித்தார். அவரும் அதை அந்தப்படியே செய்தார். தேவன் அவரிடம் சொல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை. ஆமென் அது தான் வெளிப்படையான உண்மை, ஒரு காரியத்தைச் செய்வதற்கு ஆவியானவர் நம்மை ஏவும் வரை நாம் காத்திருக்க வேண்டும். நாம் முற்றிலுமாக கிறிஸ்துவுக்குள் மறைந்திருந்தால், அவர் நம்மை இங்குமங்கும் தள்ளவேண்டிய அவசியமிராது. அவர் தலையையசைக்கும் போது, நாம் ஆயத்தமாகிறோம். அப்பொழுது எதுவும் நம்மை தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் அது தேவனுடைய சித்தமென்று நாமறிகிறோம். 34நிக்கொதேமுவுக்கு ஒரு வழிகாட்டி அவசியமாயிருந்தது. அவர் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வழிகாட்டி. அந்த வழிகாட்டியால் அவன் வழி நடத்தப்பட முடியும். ஏனெனில் அவர் தேவனால் ஊக்குவிக்கப்பட்டவர் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் பரிசேயர் சதுசேயர் இவர்களின் பாரம்பரியங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றின போதிலும், எதுவும் நடப்பதை அவன் காணவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தான், ஆனால் அங்கு ஒரு மனிதன், அவரே வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவென்று உரிமை பாராட்டி வருகிறார். அவர் தேவனுடைய அதே கிரியைகளைச் செய்கிறார். இயேசு, “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்ன விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், நான் செய்கிற அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள். அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன'' என்றார். 35எனவே, ''ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'' என்று நிக்கொதேமு கூறினதில் வியப்பொன்றுமில்லை. பாருங்கள், அவன் தன்னுடைய சபைக்குத் தலைவனாயிருந்த போதிலும், அவனுக்கு ஒரு வழிகாட்டி அவசியமாயிருந்தது. அவன் மதிப்பிற்குரியவன். அவன் பிரதான ஸ்தானம் வகித்திருந்தான். அவன் பெரியவன். தேசம் முழுவதிலுள்ள ஜனங்கள் அவனுக்கு மதிப்பு கொடுத்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் மறுபடியும் பிறக்க வேண்டுமெனும் விவகாரம் வந்த போது, அவனுக்கு ஒரு வழிகாட்டி அவசியமாயிருந்தது. நமக்கும் அவ்வாறே ஒரு வழிகாட்டி அவசியம். ஆம். 36கொர்நேலியு கௌரவமுள்ள ஒரு மனிதன். அவன் ஜெப ஆலயங்களைக் கட்டினான். அவன் யூதர்களை மதித்தான். ஏனெனில் அவர்களுடைய மார்க்கம் சரியென்று அவன் அறிந்திருந்தான். அவன் தருமங்களைச் செய்தான். அவன் தினந்தோறும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினான். ஆனால் பரிசுத்த ஆவி வந்தபோது, (சபையில் வேறொன்று சேர்க்கப்பட்ட போது), அவனுக்கு ஒரு வழிகாட்டி அவசியமாயிருந்தது. தேவன் அவனிடம் பரிசுத்த ஆவியை, பேதுரு என்னும் நபரின் உருவில் அனுப்பினார்...“ இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் இறங்கினார். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). தேவன் வழிகாட்டியை பேதுருவின் மூலம் உபயோகித்தார். அவர் அதை உபயோகித்து, கொர்நேலியுவை சரியான வழியில் நடத்தினார். பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் புறஜாதிகளின் மேல் இறங்கினார். அப்பொழுது அவன், இவர்கள் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா? என்று கேட்டான். பாருங்கள் பேதுருவல்ல,வழிகாட்டி பேசுகின்றார். அவர்கள் ஒரு கூட்டம் புறஜாதிகள். அவனுடைய பார்வையில் அவர்கள் அசுத்தமானவர்கள். அவன் அங்கு போகக் கூட விரும்பவில்லை. ஆனால் வழிகாட்டியோ, நான் உன்னை அனுப்புகிறேன் என்றார். வழிகாட்டி உன்னை முற்றிலுமாக ஆட்கொண்டு அவர் உன்னை வழி நடத்த நீ விட்டுக் கொடுக்கும் போது, நீ நினையாத காரியங்களைச் செய்கின்றாய். ஓ, பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுவதென்பது எவ்வளவு அற்புதமானது அவரே வழிகாட்டி. அது சரியே. அவர் பேதுருவின் மூலம் பேசி, கொர்நேலியு என்ன செய்ய வேண்டுமென்று எடுத்துரைத்தார். அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது, ''நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களுக்கு நாம் தண்ணீரை விலக்கக் கூடாது“ என்று பேதுரு கூறினான். அவர்கள் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். யார் பேதுருவை அவ்வாறு செய்ய வழி நடத்தியது. அவனுக்குள் இருந்த வழிகாட்டி. ”நீங்கள் என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்“ என்று இயேசு கூறவில்லையா? ஆமென். 37எருசலேமிலிருந்து வந்து கொண்டிருந்த அந்த எத்தியோப்பிய மந்திரி. அப்பொழுது தேவன் உலகத்தில் ஒரு வழிகாட்டியை வைத்திருந்தார். பரிசுத்த ஆவியானவர் இந்த வழி காட்டியால் நிறைந்திருந்த ஒருவனையும் (பிலிப்பு) அவர் வைத்திருந்தார், அவன் ஒரு பிரசங்கியல்ல அவன் ஒரு மூப்பன். அவன் பிணியாளிகளை சுகப்படுத்தி பிசாசுகளைத் துரத்தி, அங்கு ஒரு பெரிய பரபரப்பை உண்டு பண்ணினான். பட்டினத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது. அவனை நூற்றுக்கணக்கானவர் சூழ்ந்திருந்தனர் வழிகாட்டி அவனிடம், ''நீ போதிய தூரம் சென்றுவிட்டாய், இப்பொழுது. மறுபுறம் செல்லலாம்“ என்றார், அவன் வழிகாட்டியிடம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீங்களும் உங்கள் வழிகாட்டியின் வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள். அவரைப் பின்பற்றுங்கள் இல்லையேல், நீங்கள் வழி தவறி, காணாமற் போய்விடுவீர்கள். அவரை நீங்கள் விட்டுவிட்டால், சுயமாகவே நீங்கள் செல்ல வேண்டுமென்பதை ஞாபம் கொள்ளுங்கள். ஆகையால் நாம் வழி காட்டிக்கு அருகில் இருக்க விரும்புகிறோம். 38எனவே வழிகாட்டி, “பிலிப்புவே, இந்த கூட்டத்தை விட்டு, யாருமில்லாத வனாந்தரத்துக்குச் செல் உன்னை நான் அங்கு அனுப்புகிறேன், அங்கு உன்னை நான் கொண்டு செல்லும் போது ஒரு மனிதன் அங்கிருப்பான்'' என்றார். அங்கு மந்திரி தனிமையில் வந்து கொண்டிருக்கிறான். எத்தியோப்பிய ராஜஸ்திரீயிடம் அவன் பெரியவனாயிருந்தான். அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டே வந்தான். வழிகாட்டி பிலிப்புவினிடம், ''அந்த இரதத்துடன் சேர்ந்து கொள்'' என்றார். பிலிப்பு, அவனிடம், ''நீர் வாசிப்பது உமக்குப் புரிகிறதா''? என்று கேட்டான். அதற்கு அந்த மந்திரி, ''என்னை வழிநடத்த ஒருவரும் இல்லையே, எனக்கு எப்படி புரியும்'' என்றான். ஓ, என்னே! ஆனால் பிலிப்புவுக்கு வழிகாட்டி இருந்தார், ஆமென், அவன் அந்த வேதத்திலிருந்து தொடங்கி, கிறிஸ்துவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். ஆமென், வழி காட்டி! அவன் கோட்பாடுகளைக் குறித்து அவனுக்குப் பிரசங்கிக்கவில்லை. அவன் வழிகாட்டியை - கிறிஸ்துவை - குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். அவன் அவனுக்கு தண்ணீர் ஞானஸ்நானம் கொடுத்தான். நிச்சயமாக. ஓ, அதை நான் எவ்வளவாக விரும்புகிறேன்! 39இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருந்த போது, அவர்கள் அதற்கு முன்பு அவ்வழியாக பிரயாணம் செய்ததில்லையென்று தேவன் அறிந்திருந்தார். அது நாற்பது மைல் தூரம் தான். ஆயினும் அவர்களுடன் கூட செல்ல அவர்களுக்கு ஒன்று அவசியமாயிருந்தது. இல்லையேல் அவர்கள் வழிதப்பிவிடுவார்கள். எனவே தேவன் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியை அனுப்பினார். யாத். 13: 21. அவர் வழியில் உங்களைக் காக்கிறதற்கும், உங்களை வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், நான் என் தூதனை அக்கினி ஸ்தம்பத்தை உங்களுக்கு முன்னே அனுப்புகிறேன் என்றார். (யாத். 23: 20). இஸ்ரவேல் புத்திரர் அந்த வழிகாட்டியை பின்தொடர்ந்தனர். இரவிலே அக்கினி ஸ்தம்பம், பகலிலே மேகஸ்தம்பம். அது நின்றபோது, அவர்களும் நின்றனர். அது பிரயாணப்பட்ட போது. அவர்களும் பிரயாணப்பட்டனர். அவர்கள் அந்த தேசத்தினருகில் வந்த போது, அதில் பிரவேசிக்க அவர்கள் தகுதியாய் காணப்படவில்லை. எனவே அவர் அவர்களை மறுடியும் வனாந்தரத்துக்குக் கொண்டு சென்றார். அவர்களுடன் செல்ல அவர் மறுத்தார். 40சபையும் இன்று அந்நிலையில்தான் உள்ளது, ஆனால் நோவாவின் நாட்களில் இருந்தது போல, இந்நாட்களிலும் தேவனுடைய நீடிய பொறுமை இருந்து வருகிறது. சபை மாத்திரம் தன்னை சீர்படுத்திக் கொண்டு ஒழுங்குக்குள் வந்திருந்தால், அது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் இப்பொழுதோ அவர் நம்மை சுற்றி சுற்றி சுற்றி கொண்டு செல்ல வேண்டியதாயுள்ளது. எகிப்திய இராணுவ வீரர்கள் மடிந்து கிடக்கிறதையும், குதிரைகள் மூழ்கியுள்ளதையும், பார்வோனின் இரதங்கள் தலை கீழாய் கிடப்பதையும் இஸ்ரவேல் ஜனங்கள் கண்டு ஆரவாரம் செய்தனர். அவர்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது. மோசே ஆவியில் பாடினான். மிரியாம் ஆவியில் நடனமாடினாள். இஸ்ரவேல் குமாரத்திகள் கரையில் இங்குமங்கும் ஓடி ஆர்ப்பரித்து நடனமாடினர். அவர்கள் பாலும் தேனும் ஓடின தேசத்தையடைய சில நாட்கள் மாத்திரமேயிருந்தன. ஆனால் அதை அடைய, அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் செல்லும் என்பதை அவர்கள் அப்பொழுது உணராமலிருந்தனர். அவர்கள் தேவனுக்கும் வழிகாட்டிக்கும் விரோதமாய் முறுமுறுத்ததன் விளைவாக இப்படியாயிற்று. 41நாமும் அதே விதமாகத்தான் இருக்கிறோம். இங்கிருந்து நான் ஷ்ரீவ் போர்ட்டுக்குச் செல்கிறேன். லூயிசியானாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் நன்றி தெரிவிக்கும். நாளன்று (Thanks giving Day) இறங்கினார். அன்று முதல், சபை எவ்வளவாக விழுந்துவிட்டது! தொடக்கத்தில் ரோமன் கத்தோலிக்க சபை பெந்தெகோஸ்தே சபையாக இருந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? அது உண்மை. அது பெந்தகோஸ்தே சபையாக இருந்தது. ஆனால் வணங்காக் கழுத்துள்ள பெருமக்கள் உள்ளே நுழைந்து. தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக பாரம்பரியங்களையும் கோட்பாடுகளையும் புகுத்தினர். இப்பொழுது அவர்களிடம் என்ன உள்ளது என்பதைக் கவனியுங்கள். அதில் ஒரு சிறு வேதவாக்கியம் கூட இல்லை. அவர்கள் ஒன்றுக்கு பதிலாக வேறொன்றை நுழைத்தனர். பரிசுத்த ஆவிக்குப் பதிலாக ரொட்டித் துண்டை, முழுக்கு ஞானஸ்நானத்துக்குப் பதிலாக தெளிப்பு ஞானஸ்நானத்தை; “கர்த்தராகிய இயேசுகிறிஸ்து” அதற்க்குப் பதிலாக, ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி“யை, இந்த மகத்தான தேவனுடை ஜீவ வார்தைத்களுக்குப் பதிலாக அவர்கள் வேறு காரியங்களை நுழைத்தனர். அவர்கள் வேத போதனையிலிருந்து அதிக, அதிக தூரம் சென்றுவிட்டனர். 42ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு லூயிசியானாவில் பெந்தெகொஸ்தே ஆவி இறங்கினது. அது இன்னும் இருநூறு ஆண்டுகள் நிலைத்திருக்குமானால், இந்த ஐம்பது ஆண்டுகளில் அது விழுந்து போன நிலையின் கணக்கின்படி, கத்தோலிக்க சபையை விட அது அதிகம் பின் வாங்கிப் போயிருக்கும் அவர்கள் தொடர்ச்சியாக கூட்டிக் கொண்டே செல்கின்றனர். பழைமை நாகரீகமுள்ள பிரசங்கிமார்கள் போய்விட்டனர். தெருப் பிரசங்கங்களைக் குறித்து அங்கு கேள்விப்படவே முடியாது. அங்கு நாம் காண்பதெல்லாம் ஹாலிவுட் நாகரீகம் அங்கு சேர்க்கப்பட்டு, பெண்கள் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டு, சூட்டை கால் சட்டையணிந்து, வர்ணம் தீட்டிக்கொண்டு, அதே சமயத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்வதே. ரிக்கி ஒருவன் கிட்டார் (Guitar) வாத்தியத்தை வாசித்துக் கொண்டே இங்குமங்கும் ஓடுகின்றான், பெண்களும் சருமம் வெளியில் பிதுங்கி வருவது போன்று உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் உடைகளையணிந்து, காதுகளில் லோலாக்கை தொங்கவிட்டுக் கொண்டு, நாட்டின் சீமாட்டி (ஜாக்குலின் கென்னடி - தமிழாக்கியோன்) செய்துள்ள முடி அலங்காரம் போன்று தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, மேடையில் உடலை ஆட்டிக் கொண்டு ஆடி, அதே சமயத்தில் அதை கிறிஸ்தவ மார்க்கம் என்றழைக்கின்றனர். இன்று நமக்குத் தேவையானது பழைமை நாகரீகம் கொண்ட, தேவனால் அனுப்பப்பட்ட, எரிக்கும் மார்க்கமே. அது சபையிலிருந்து உலக காரியங்களை எரித்துவிடும். நாம் மறுபடியும் பரிசுத்த ஆவிக்கும் அக்கினிக்கும் வர வேண்டியவர்களாயிருக்கிறோம், அது உலோக அழுக்கை (dross) எரித்துப் போட்டு, பழமை நாகரீகம் கொண்ட போதகத்தை நம்மிடையே மீண்டும் கொணரும். அத்தகைய போதகம் துப்பாக்கி குண்டைப் போல் துளைத்து, வெளிப்படையாக சத்தியத்தை போதித்து, பரலோகத்தை உயரமாக்கி, நகரத்தை சூடாக்கும். அத்தகைய போதகமே நமக்கு அவசியமாயுள்ளது. ஆனால் இன்று அப்படி செய்து பாருங்கள். சபையோர் தங்கள் வாக்களிக்கும் உரிமையை உபயோகித்து உங்களை அகற்றிவிடுவார்கள். 43சில சமயங்களில் நல்ல போதகர்கள், தங்கள் சபையோர் காரணத்தால் வழி தவறிச் சென்றுவிடுகின்றனர். அதனால் தான் எனக்கு எந்த ஸ்தாபனமும் கிடையாது. எனக்கு ஒரே தலைமை ஸ்தலம் உண்டு. அது பரலோகத்திலுள்ளது. அவர் எங்கு என்னை அனுப்பினாலும் நான் செல்கிறேன். அவர் கூறுவதை மாத்திரம் நான் எடுத்துரைக்கிறேன். நமக்கு எந்த ஸ்தாபனமும் வேண்டாம். இந்த சபை ஸ்தாபனமாக்கப்பட வேண்டுமென்று எப்பொழுதாகிலும் நீங்கள் பேசினால், உடனே உங்கள் போதகரை நீங்கள் இழந்துவிடுவீர்கள். அதற்கு பிறகு ஐந்து நிமிடங்கள் கூட நான் இங்கிருக்கமாட்டேன். ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட ஒவ்வொரு சபையும் வளராமல் வித்துக்குச் சென்றுவிட்டது. அப்படி செல்லாத ஒரு சபையாவது எனக்குக் காண்பியுங்கள். மறுபடியும் உயிர் பெற்ற ஸ்தாபனம் ஒன்றை எனக்குக் காண்பியுங்கள். பரிசுத்த ஆவியானவர் சபையை வழி நடத்த அனுப்பப்பட்டிருக்கிறாரேயன்றி, மனிதர்களை தலைவர்களாகக் கொண்ட ஒரு ஸ்தாபனத்தை வழிநடத்த அல்ல. பரிசுத்த ஆவியானவர் சகல ஞானமும் பொருந்தியவர். ஆனால் மனிதனோ பிடிவாதமுள்ளவனாகவும், அலட்சியமுள்ளவனாகவும் இருக்கிறான். 44இஸ்ரவேல் புத்திரரிடம் தேவன், அவர்களுக்கு ஒரு வழிகாட்டியை அனுப்புவதாக வாக்களித்திருந்தார். அந்த வழிகாட்டி அவர்களைப் பாதையில் வழிநடத்திச் சென்றார். அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தைப் பின் தொடர்ந்த வரைக்கும் சரியாயிருந்தனர். அவர் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார். அது வரைக்கும் தான் அவர் போனார். அதன் பிறகு அந்த மகத்தான போர்வீரன் யோசுவா அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம், உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். மூன்றாம் நாள் கர்த்தர் யோர்தானைப் பிரிந்து போகப் பண்ணுவார். நாம் அதன் வழியாக கடந்து செல்வோம் என்று அவன் ஒரு நாள் கூறினது நினைவிருக்கிறதல்லவா? அவன் என்ன சொன்னான் என்று கவனியுங்கள். (அது எனக்கு மிகப் பிரியம்): “உடன்படிக்கை பெட்டிக்குப் பின் செல்லுங்கள். இதற்கு முன்னே நீங்கள் ஒரு போதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை''. 45உடன்படிக்கை பெட்டி என்பது என்ன? வார்த்தை. உங்கள் ஸ்தாபனங்களின் வழியில் செல்ல வேண்டாம். வார்த்தைக்குப் பின்னால் செல்லுங்கள். ஏனெனில் இதற்கு முன்னே நீங்கள் இந்த வழியாய் நடந்து போகவில்லை. சகோதரனே, கிறிஸ்தவ சபையானது தன்னை சோதித்தறிய காலம் ஒன்று இருக்குமானால், அது இப்பொழுதுதான். ரோமாபுரியில் சபைகளின் சங்கம் நிறுவப்பட்டு, அவர்களிடையே காணப்படும் கருத்துவேறுபாடுகளை அவர்கள் சரி செய்து கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா ஸ்தாபனங்களும் ஒன்று கூடி, வேதம் கூறியுள்ளது போல், மிருகக்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குகின்றன. இன்றைய காலை செய்தியில், நாம் என்ன கூறினோம் என்று உங்களுக்குத் தெரியும். எல்லாமே வாசலினருகே வந்துள்ள காலம் இது. ஆனால் ஜனங்களோ இன்னும் ஸ்தாபன கோட்பாடுகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் வார்த்தைக்கு பின்னால் இருப்பது நல்லது. வார்த்தை உங்களை வழி நடத்தி அக்கரைக்குக் கொண்டு செல்லும். ஏனெனில் வார்த்தையே கிறிஸ்து, கிறிஸ்துவே தேவன், பரிசுத்த ஆவி. வார்த்தைக்குப் பின்னால் நிலைத்திருங்கள்! ஓ, ஆம் ஐயா! வழிகாட்டியுடன் நிலைத்திருங்கள். அதற்கு பின்னால் நிலைத்திருங்கள் அதற்கு முன்னால் சென்றுவிடாதீர்கள். அதற்கு பின்னால் நிலைத்திருங்கள். அது உங்களை வழி நடத்தட்டும். நீங்கள் அதை வழி நடத்த வேண்டாம். அது உங்களை வழி நடத்த விட்டுக் கொடுங்கள். யோசுவா, ''இதற்கு முன்னே நீங்கள் இந்த வழியாய் நடந்து போகவில்லை. அந்த வழியைச குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது'' என்றான். 46அது தான் இன்றுள்ள தொல்லை. விஸ்தாரமான வழியில் உங்களை நடத்திச் செல்ல உங்களுக்கு வழிகாட்டி அவசியமில்லை. உங்களுக்கு அதிலுள்ள சந்துக்கள் அத்தனையும் தெரியும். பாவத்திற்குப் போகிற வழி உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அதில் நீண்ட காலம் நடந்திருக்கிறீர்கள். அதைக் குறித்து யாரும் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதிலுள்ள குறுக்கு வழிகள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். அது உண்மை. ஒவ்வொரு பாவத்தைக் குறித்தும் நீங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள். எப்படி திருட வேண்டும் என்று யாரும் உங்களுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. அதைபற்றி உங்களுக்குத் தெரியும். மற்றவர்களை சபிப்பதற்கு யாரும் உங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்; உங்களுக்குத் தெரியும். அத்தகைய பொல்லாங்கான செயல்களைப் புரிவது எப்படியென்று யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை. அது எல்லாவிடங்களிலும் நிலவியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களே கடந்து சென்றுவிட்டார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் வேறொரு தேசத்தில் இருக்கின்றீர்கள்! நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்கள். நீங்கள் வேறொரு தேசத்தில் பரலோகதேசத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருக்கின்றீர்கள். 47உங்களுக்கு அதன் வழியெல்லாம் தெரியும். ஓ என்னே, ஆமாம் சீட்டு விளையாட்டில், கையிலுள்ள சீட்டை வைத்துக் கொண்டு எப்படி விளையாடுவதென்று தெரியும். சொக்கட்டானை உருட்டும் போது, அதில் எந்த எண் விழும் என்றெல்லாம் தெரியும். ஆனால் பரிசுத்தம், நீதி, தேவனுடைய வல்லமை என்று வரும்போது, பரிசுத்த ஆவியானவர் எப்படி கிரியை செய்கிறார் என்றும், என்ன செய்கிறார் என்றும் அறிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வழிகாட்டியாகிய தேவனுடைய வார்த்தையின் பின்னால் நிலைத்திருப்பது நல்லது. பாருங்கள்? இதற்கு முன்னே நீங்கள் இந்த வழியாய் நடந்து போகவில்லை. “நான் அறிவாளி. கல்லூரியில் படித்து இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளேன்'' என்று நீங்கள் கூறலாம். அதையெல்லாம் மறந்துவிடுங்கள். ஆம் ஐயா. ''நான் வேதாகமக் கல்லூரியில் படித்தேன்'' எனலாம். அதை மறந்துவிடுங்கள். ஆம், நீ வழிகாட்டிக்குப் பின்னால் தங்கி, அவர் உன்னை வழி நடத்த விட்டுக்கொடு. அவருக்கு வழி நன்றாகத் தெரியும், உனக்குத் தெரியாது. இதற்கு முன்னே இந்த வழியாய் நீ நடந்து போகவில்லை. “அவர்கள் நடந்து போயிருக்கிறார்கள்'' என்று நீ கூறலாம். அவர்கள் அப்படி நடந்து போயிருந்தால், இயேசு இந்த வழியாய் நடந்து போனவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். (மாற் 16:17-18). அநேகர் இதை மறுக்கின்றனர். இந்த வாக்கியங்கள் தேவனுடைய ஆவியால் அருளப்படவில்லையென்றும் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் அந்த வழிகாட்டியைப் பின் தொடருவதில்லை. அவர்கள் மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றனர். நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குப் பின்னால் நிற்பது நல்லது. ஏனெனில் நீங்கள் இந்த வழியாய் நடந்து போகவில்லை. 48நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்தத்திற்குள் பிறந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த வழியாய் நீங்கள் இதற்கு முன்னே நடந்து போகவில்லை. நீங்கள் இந்த வழியாய் சென்றால், நீங்கள் பரிசுத்தத்தின் வழியாக வர வேண்டும். ஏனெனில் அது புதிய தேசம், புதிய ஜீவன், புதிய ஜனங்கள். நீ சபைக்கு சென்று, ''அங்கு யாராகிலும் எழுந்து நின்று, தேவனுக்கு மகிமை! அல்லேலூயா'' என்று கூச்சலிட நேரிட்டால், என் சபையில் அப்படி செய்வது. வழக்கமில்லையே! நான் எழுந்து சென்றுவிடுகிறேன் என்பாயானால், கவனமாயிரு. இப்பொழுது வார்த்தையின் பின்னால் தங்கியிரு. அந்த வழிகாட்டி உன்னை வழி நடத்தும். “அவர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். நான் உரைத்த எல்லாவற்றையும் அவர் வெளிப்படுத்தி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். உண்மையான வழிகாட்டி, பேராயரிடம் செல்லாதே, வழிக்காட்டியிடம் போ வழிகாட்டியைத் தவிர வேறு யாரிடமும் போகாதே. அவர் ஒருவர் மாத்திரமே உன்னை வழி நடத்த அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் ஒருவர் மாத்திரமே அப்படி செய்வார். தேவன் உங்களுக்கு ஒரு வழிகாட்டியை அருளியுள்ளார். தேவனால் அருளப்பட்ட வழியைத் தெரிந்து கொள். இன்றுள்ள தொல்லை என்னவெனில், ஜனங்கள் சபைக்கு வந்து சில நிமிடங்கள் உட்கார்ந்திருக்கின்றனர். அப்பொழுது அவர்களுக்கு வழக்கமில்லாத ஒன்று சம்பவிக்கின்றது. 49குளிரடைந்த, சடங்காசாரத்தைக் கைக்கொள்ளும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து வந்த ஒரு பெண்ணை நான் பாராட்டுகிறேன். அவளுக்காக தான் ஜெபம் செய்தேன். தேவன் அவளை சுகப்படுத்தப் போகிறார். அவள் இதை புரிந்து கொள்ளவில்லை, இதைக் குறித்து அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவளுக்குத் தெரியாது என்று அவள் கூறினாள். என்னை வந்து பார்க்கும்படி அவளிடம் கூறினேன். அவள் பயந்த சுபாவமுள்ளவள். ஆனால் வழிகாட்டியோ அவளிடம் “நகர்ந்து செல்'' என்று கூறிக் கொண்டேயிருந்தார். அவள் சுகத்தைப் பெற்றுக் கொண்டாள் பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் இந்த காரியங்களுக்கு நம்மை வழி நடத்துகிறார். பாருங்கள், தேவன் ஒரு வழியை நமக்கு அருளியிருக்கிறார். 50காட்டு வாத்துக்கள் தெற்கு நோக்கிச் செல்வதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அந்த வாத்து எங்கோ ஓரிடத்தில் ஒரு குட்டையில் பிறக்கின்றது. அதற்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசை எதுவென்று தெரியாது. கனடாவின் மலைகளின் நடுவிலுள்ள அந்த குளத்தை தவிர வேறொன்றும் அதற்கு தெரியாது. அந்த குளத்தை விட்டு அது வெளியே வந்ததும் கிடையாது. ஆனால் அது ஒரு தலைவனாக பிறந்துள்ளது. ஓரிரவு மலைகளின் உச்சயில் மூடுபனி இறங்குகிறது. என்ன நேரிடுகிறது? குளிர்ந்த காற்று அங்கிருந்து வீசத் தொடங்குகின்றது. அப்பொழுது, மற்ற வாத்துக்கள் குளிரில் நடுங்கத் தொடங்குகின்றன. அவை, ''அம்மா, இதன் அர்த்தம் என்ன?“ என்று இந்த வாத்திடம் கேட்கின்றன. பாருங்கள், இதற்கு முன்பு இந்த வாத்து குளிர்ந்த சீதோஷ்ண நிலையை உணர்ந்ததேயில்லை. அது சுற்றும் முற்றும் பார்க்கிறது. அது குளத்தின் ஓரம் பனியாக உறைகிறதை காண்கிறது. குளத்தில் பனிக்கட்டி தோன்றுகிறது. அதற்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் திடீரென்று... அது வாத்துக்களின் கூட்டத்திற்கு வழிகாட்டியாகப் பிறந்துள்ளது. அதற்கு திடீரென்று ஏதோ ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. அப்பொழுது அது குளத்தின் நடுவில் குதிக்கக் தொடங்குகின்றது. நீங்கள் அதை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். நாங்கள் அதை 'தேவனளித்த ஊக்கம்' (inspiration) என்றழைக்கிறோம். நீங்கள் வேண்டுமானால் அதை உள்ளுணர்வு (instinct) என்றழைக்கலாம். அது குளத்தின் நடுவில் குதித்து, தன் சிறு அலகை தூக்கி, 'ஹாங்க் - ஹாங்க். ஹாங்க - ஹாங்க' என்று சத்தமிடத் தொடங்குகிறது. அப்பொழுது குளத்திலுள்ள எல்லா வாத்துக்களும் அதனிடம் வருகின்றன. ஏன்? அது இடும் சத்தத்திலிருந்து தங்கள் தலைவனை அறிந்து கொள்கின்றன. 51''எக்களாம் விளங்காத சத்தமிட்டால், எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?'' (1 கொரி 14:8). அது உண்மை. அது போன்றும் அந்த வாத்தும் விளங்காத சத்தமிட்டிருந்தால், எந்த வாத்து பறப்பதற்கு ஆயத்தப்பட்டிருக்கும்? அந்த வாத்து, தன் அலகைத் தூக்கி 'ஹாங்க், ஹாங்க், ஹாங்க், ஹாங்க்' என்று சத்தமிடும் போது, மற்றெல்லா வாத்துக்களும் அதனிடம் வந்து, ''ஹாங்க், ஹாங்க், ஹாங்க, ஹாங்க“ என்று சத்தமிடுகின்றன. அவைகளுக்கு அங்கே யூபிலி மகிழ்ச்சி உண்டாகின்றது. அவை குளத்தின் நடுவில் கர்ணம் அடித்து அடித்து மகிழ்கின்றன. சிறிது நேரத்துக்குப் பின்பு, அதற்குள் ஒரு அசைவு உணர்வு தோன்றுகின்றது. அது புறப்பட்டுச் செல்ல வேண்டும். அது செட்டைகளை கீழே தாழ்த்தி, குளத்திலிருந்து ஆகாயத்தில் பறந்து, நான்கைந்து வட்ட மடிக்கின்றது. பின்பு லூயிசியானாவுக்கு அது நேராக பறந்து செல்கின்றது. அதைப் பின் தொடர்ந்து எல்லா வாத்துக்களும், ”ஹாங்க - ஹாங்க'' என்று சத்தமிட்டு பறந்து செல்கின்றன. ஏன்? அது ஒரு வழிகாட்டி! ஆமென்! வாத்துக்கள் தங்கள் வழிகாட்டியை அறிந்துள்ளன. ஆனால் சபையோ அதன் வழிகாட்டியை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றது. ஆம், அந்த வாத்துக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். 52அலாஸ்காவிலிருந்து வரும் அந்த கூஸ் வாத்துக்களை (geese) பாருங்கள், ஒரு ஆண் கூஸ் வாத்து (gander) அவைகளை வழி நடத்துகின்றது. இந்த கூஸ் வாத்துக்கள் அந்த ஆண் வாத்தை கவனமாகப் பின்பற்ற வேண்டும். அந்த ஆண்வாத்து என்ன கூறுகிறதென்று அவை கவனமாகக் கேட்க வேண்டும். நான்கு ஆண்டுகட்டு முன்பு லுக் (Look) பத்திரிக்கையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஒரு ஆண் கூஸ் வாத்து ஒரு முறை, தான் என்ன செய்கிறதென்று அறியாமல், ஒரு கூட்டம் கூஸ் வாத்துக்களை இங்கிலாந்துக்கு வழிநடத்திச் சென்றதாம். அதற்கு முன்பு அவை இங்கிலாந்தில் காணப்படவேயில்லை. அந்த ஆண் கூஸ் வாத்து, தான் எங்கு செல்கிறது என்பதை அறியாமலிருந்தது. அவை அங்கு அடைந்துவிட்டன. இப்பொழுது அவைகளால் திரும்பி வர முடியவில்லை. 53இன்றைய கூஸ் வாத்துக்களிடமும் அது தான் காணப்படுகின்றது. அவர்கள் இப்பொழுது கூட்டமாக ஒன்று சேருகின்றனர். கூஸ் வாத்துக்கள் கும்பலாக இங்கிலாந்தில் பறந்து கொண்டிருக்கின்றன, அவைகளுக்குத் திரும்பி வர வழி தெரியவில்லை என்று 'லூக்' பத்திரிக்கை கூறுகின்றது. எனக்குத் தெரிந்த கூஸ் வாத்துக்களும் அதே நிலையில் தான் உள்ளனர், அவர்கள் கும்பலாக ஒன்று கூடுகின்றனர். அவர்கள் பெரிய கூட்டங்களை அதிக நேரம் நடத்தி பெரிய எழுப்புதல் பிரசங்கியார் ஒருவரை அழைத்து பிரசங்கிக்கும்படி செய்கின்றனர். ஆனால் அவர்கள் போகும். வழியை அறியாமலிக்கின்றனர் அவர்கள் கும்பலாக ஒன்று கூடுகின்றனர். ஏனெனில் ஸ்தாபன உல்லாசத்திற்கு அவர்களை வழிநடத்த ஒரு ஆண் கூஸ் வாத்து உள்ளது. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புவதில்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு அவர்கள் திரும்புவதில்லை. இவையனைத்தையும் செய்துவிட்டு, நமது நாட்களில் எழுப்புதல் ஏன் உண்டாகவில்லையென்று அவர்கள் வியப்புகின்றனர். பாருங்கள்! அந்த விளங்கும் சத்தத்தினை நீங்கள் பெற வேண்டும். அது தான் சுவிசேஷ எக்காளம். அது சுவிசேஷத்தை தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் அறிவிக்கிறதாயுள்ளது. அது கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் அறிவிக்காமல் வேதத்தையும் பரிசுத்த ஆவியையும் அறிவிக்கிறது. விசுவசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும் பாருங்கள்? அவர்கள் இவ்வாறு பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். 54ஒரு முறை ஒரு ஆண் கூஸ் வாத்து ஒரு கூட்டம் கூஸ் வாத்துக்களை இருட்டில் பறக்கச் செய்து, அவை சாகக் காரணமாயிருந்தது என்று கூறப்படுகின்றது. அது எங்கு போகின்றது என்று அதற்குத் தெரியவில்லை. முடிவில் அந்த கூட்ட வாத்துக்கள் மலைகளில் மோதி நொருங்கிப் போயினவாம். அவைகள் அந்த விளங்கும் சத்தத்தை அறிந்திருந்து மற்ற வாத்துக்களும் அதை அறிந்திருக்குமானால், அவை மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி, தெற்கு நோக்கி பறந்து சென்றிருக்கும். அவை ஏன் அங்கு செல்கின்றன? அங்கு குளிரில்லாத காரணத்தால். குளிரைத் தவிர்க்க தேவன் ஒரு வாத்துக்கு போதிய ஞானம் அளித்திருக்கும் போது, அவர் எவ்வளவு அதிகமாக சபைக்கு ஞானத்தை அளித்திருக்க வேண்டும்? வாத்து உள்ளுணர்வு கொண்டு அப்படி செய்யக் கூடுமானால், சபையிலுள்ள பரிசுத்த ஆவியானவர் இன்னும் எவ்வளவு அதிகமாக இதை உணர்த்தக் கூடியவராயுள்ளார்? அது நம்மை பழைய சடங்காச்சாரத்திலிருந்தும், கோட்பாடுகளிலிருந்தும், வெளியேற்றி, மகிமையுள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு நம்மைக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு நற்குணம், ஞானம், பொறுமை, தேவபக்தி, பரிசுத்த ஆவி எல்லாமே இருக்கும். உண்மையான வழிகாட்டி. அங்கு தான் வழி நடத்துவார். ஏனெனில் அவர் சுவிசேஷத்தைத் தவிர வேறொன்றையும் எடுத்துரைக்கமாட்டார். தேவனுடைய வார்த்தையை மாத்திரமே அவர் எடுத்துரைப்பார். உங்களுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவை! 55அந்த சாஸ்திரிகளுக்கு தேவனைப் பற்றியே தெரியாது. அவர்கள் மந்திரம் செய்பவர்கள். மந்திரவாதிகள். அவர்கள் கிழக்கு தேசத்தைச் சேர்ந்தவர்கள். ''கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்“ (மத் 2:2) என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளதென்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் கிழக்கிலிருந்து மேற்கை நோக்கினார்கள். பாருங்கள்? ”கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்“ அவர்கள் கிழக்கிலிருந்தார்கள். நாங்கள் கிழக்கிலிருந்தபோது அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம். ''அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்”. 56அவர்கள் புறப்பட ஆயத்தப்படுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவர்களில் ஒருவனின் மனைவி, தன் கணவனிடம், “மூட்டைக் கட்டியாகிவிட்டது. உங்கள் திசைக்காட்டும் கருவி எங்கே? என்று கேட்கிறாள். அவனோ, ''இம்முறை நான் திசைக்காட்டும் கருவியை உபயோகிக்கப் போவதில்லை'' என்கிறான். அப்படியானால் மலைகளை எப்படி கடக்கப் போகிறீர்கள்? அவர்கள் டைகிரிஸ் நதியைக் கடந்து சமவெளிக்கு வர வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அவர்கள் ஒட்டகங்களின் மேல் பயணம் செய்தனர். அவள், ''திசைக்காட்டும் கருவியைக் கொண்டு போகாமல் எப்படி கடக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்கிறாள். அவன், ''இல்லை'', என்கிறான். ''அப்படியானால் எப்படி போவீர்கள்''? நான் தேவன் அருளியுள்ள வழியில் செல்லப் போகின்றேன். வானத்திலுள்ள இந்த நட்சத்திரம் என்னை அந்த ராஜாவினிடத்தில் நடத்திச் செல்லும். கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள அதைப் பின் தொடர்ந்து மேற்கை அடைந்துவிட்டோம். அவர் எங்கே?அவர்கள் தேவன் அருளின வழியை பின்பற்றினர். சிறிது நேரம் அவர்கள் கோட்பாடுகளில் சிக்கிக்கொண்டனர். சிறந்த உடை அணிந்திருந்த இவர்கள் எருசலேமை அடைந்தவுடன் தெருக்களில் இங்குமங்கும் சென்று, அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்கத் தொடங்கினர். எருசலேம் தான் தலைமை ஸ்தலம். எனவே அங்கிருந்த பெரிய சபை இதை நிச்சயமாக அறிந்திருக்க வேண்டுமென்று எண்ணி, “அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம். அவர் எங்கே? என்று கேட்கத் தொடங்கினர். அவர்கள் போதகர் இன்னாரிடத்தும் பிரதான ஆசாரியர் இன்னாரிடத்தும் சென்றனர். அவர்கள் யாருமே இதைக் குறித்து அறியாமலிருந்தனர். ''யூதருக்கு ஒருவர் ராஜாவாகப் பிறந்திருக்கிறாரே, அவர் எங்கே''? என்று கேட்டனர். அவர்களுக்கோ தெரியவில்லை. 57ஆனால் மலையடிவாரத்திலிருந்த ஒரு கூட்ட மேய்ப்பர்களுக்கு இந்த நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆம். ஐயா. ஏனெனில் தேவன் அருளிய வழியில் அவர்கள் சென்றனர். இந்த சாஸ்திரிகள் அங்கு தங்கினர். அப்பொழுது ஏரோது ராஜா, “சங்கக் கூட்டம் (Board Meeting) ஒன்று ஒழுங்கு செய்ய வேண்டும்” என்றான். அப்பொழுது அவர்கள் சனகரீம் சங்கத்தைக் கூட்டி கேட்டபோது, ''எங்களுக்கு ஒன்றுமே தெரியாது'' என்று கூறிவிட்டனர். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது, சுகமளித்து, திறைத்து, இரட்சித்து, மறுபடியும் வரப்போகும் இந்த வழிகாட்டியாகிய பரிசுத்த ஆவியானவரைக் குறித்து அவர்கள் ஒன்றுமே அறியாமல் இருக்கின்றனர். இவையெல்லாம் நடக்கும் என்று அந்த வழிகாட்டி கூறினார். அவை நம் மத்தியில் இப்பொழுது நடந்து கொண்டு வருகின்றன. அவர் இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறவர். அவர்கள் அதைக் குறித்து அறியாதவர்களாய் இது மனோதத்துவ வசீகரணம் என்கின்றனர். அதைக் குறித்து என்ன செய்வதென்றே அவர்கள் அறியாமலிருக்கின்றனர். 58இந்த சஸ்திரிகள்... அவர்கள் எருசலேமை அடைந்தவுடன், அந்த நட்சத்திரம் மறைந்துவிட்டது. உங்களை தேவனிடம் வழிநடத்த நீங்கள் கோட்பாடுகளின் மேலும் ஸ்தாபன ஆட்களின் மேலும் சார்ந்திருப்பீர்களானால், தேவனுடைய ஒத்தாசை உங்களை விட்டு சென்றுவிடும். இந்த சாஸ்திரிகள் அலுப்பு கொண்டு, அந்த யூதர்களின் கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் விட்டகன்று, எருசலேமுக்கு வெளியே சென்றவுடன், அந்த நட்சத்திரம் மறுபடியும் தோன்றினது. அப்பொழுது அவர்கள் மிகவும் களிகூர்ந்தனர். ஏனெனில் அவர்கள் வழிகாட்டியை மறுபடியும் கண்டனர். ஒரு குளிர்ந்த, சடங்காச்சாரமுள்ள சபைக்கு சென்று, பின்பு அனல் கொண்ட, வழிகாட்டியால் நடத்தப்படும் சபைக்கு வரும்போது, அது என்னமாயிருக்கும்! அது எவ்வித வித்தியாசத்தை உண்டுபண்ணும்! ஆம், ''கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்.“ 59இஸ்ரவேல் புத்திரரிடம் யோசுவா, நீங்கள் உடன்படிக்கை பெட்டியைப் பின் தொடருங்கள். ஏனெனில் இதற்கு முன்னே, ''இந்த வழியாய் நீங்கள் நடந்து போகவில்லை“ என்றான். அந்த உடன்படிக்கை பெட்டி சரியான வழியில் அல்லாமல் வேறெந்த வழியிலும் செல்ல தேவன் அனுமதிக்கமாட்டார். எல்லோரும் அதை பின் தொடர்ந்தனர். யோசுவா யோர்தானைக் கடந்தான். இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் அதையே செய்கிறார். ஆம் ஐயா! அது பரிசுத்த ஆவியா இல்லையா என்று அறிந்து கொள்ள ஒரே வழியுண்டு. எப்படியெனில் அது தேவனுடைய வார்த்தையை உறுதிபடுத்தும் அடையாளங்களைக் கொண்டதாயிருக்கும். 60அண்மையில் ஒரு கூட்ட சகோதரர்கள் இரத்தமும் எண்ணெயும் தோன்றச் செய்தனர். அந்த வழியில் அவர்கள் செல்ல விரும்பினால் பரவாயில்லை... ஆனால் என்னைப் பொறுத்தவரை, அது தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தும் ஒன்றாகத் தோன்றவில்லை. தேவன் கூறியுள்ளதை அது உறுதிப்படுத்துவதாயிருந்தால், அது சரி, அவர்கள் உன் கையில் எண்ணெய் தோன்றியுள்ளது. எனவே நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாய் என்று கூறுகின்றனர். அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. பாருங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதலுக்கும் கையில் எண்ணெய் தோன்றுவதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்கள் கையில் தோன்றும் இரத்தம் சுகமளித்து இரட்சிப்பை அளிக்குமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னவாயிற்று? அந்த எண்ணெய் சுகமளிக்குமானால், அவருடைய தழும்புகள் என்னவாயின? பாருங்கள்? பாருங்கள்? வழிகாட்டி உங்களை சத்தியத்திற்குள் தேவனுடைய வார்த்தைக்குள் வழி நடத்துவதையே நான் விருப்புகிறேன், அப்பொழுது நீங்கள் சரியாக அமைந்திருந்து, பறந்து செல்வதற்கு ஆயத்தமாயிருப்பீர்கள். ஆம், ஐயா. ஆம். ஏன்? வழிகாட்டி மாத்திரமே அதை வாய்க்கச் செய்கின்றார். 61இங்கு ஒரு வேதவாக்கியத்தை எழுதி வைத்திருக்கிறேன். வேதவாக்கியங்களை ஏற்கனவே உங்களிடம் கூறிவிட்டேன். ஆனால் இந்த ஒன்றை படிக்க விரும்புகிறேன். அது 2 பேதுரு 1ம் அதிகாரம், 21ம் வசனம். தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். தீர்க்கதரிசனம் எப்படி உண்டானது? மனிதருடைய சித்தத்தினாலே அல்ல, ஸ்தாபனங்களின் கோட்பாடுகளின் மூலம் அல்ல. அது தேவனுடைய சித்தத்தினாலே, பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்ட போது உண்டானது. பரிசுத்த ஆவி எப்பொழுதுமே தேவனால் அனுப்பப்பட்ட வழிகாட்டியாய் உள்ளது. அந்த பரிசுத்தஆவி அக்கினி ஸ்ம்பத்தினுள் இருந்தது. அது பரிசுத்த ஆவி. அது கிறிஸ்து என்று எந்த மனிதனும் அறிவான். மோசே எகிப்தைப் புறக்கணித்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். (எபி. 11:26). அது கிறிஸ்து! யூதர்கள், ''உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்கிறாயே'' என்றனர். (யோவான் 8:57). அவரோ, ''ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'', என்றார். (யோவான் 8:58). இருக்கிறேன் என்பவரே எரிகிற முட்செடியில் மோசேயை அக்கினி ஸ்தம்பத்தில் சந்தித்தார். ஆம், ஐயா. அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவன், மூன்றாம் ஆள் அல்ல, அதே ஆள், வெவ்வேறு உத்தியோகங்களில், ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களில் அது தான் சரி. 62சரி, இப்பொழுது வேதவாக்கியம், தேவன், ஒன்றை அருளும் போது, அவர் சிறந்ததையே அருளுகிறார். தமது சபையை அரணிப்பாக வைக்க ஒரு வழியை தேவன் அருளின போது, அவர் சிறந்ததையே அருளினார். அவர் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்தில் எதை அருளினார் என்றால், தமது வார்த்தையை அருளினார். “அந்த வார்த்தையின் பின்னால் நீங்கள் உள்ளவரை பாதுகாப்பாய் இருக்கின்றீர்கள். அதை விட்டு நீங்கள் வெளியே வருவீர்களானால், நீங்கள் புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள்” என்றார். தேவன் தமது வழியை ஒருபோதும் மாற்றினதில்லை. அவ்வாறே சாத்தானும் தன் வழியை மாற்றினதில்லை. அவன் ஆதாம், ஏவாள் விவகாரத்தில் தலையிட்டது போலவே இன்றைக்கும் செய்து வருகிறான். எப்படி? அவர்களுடைய அறிவை உபயோகித்து யோசிக்க வைத்து, ''தேவன் அப்படி செய்யமாட்டார். தேவன் அவ்வாறு கூறினது உண்மை தான். ஆனால் பரிசுத்தமுள்ள தேவன் ஒருக்காலும் அப்படி செய்யவேமாட்டார்“ என்றான் சாத்தான். அவர் நிச்சயம் அப்படி செய்வார். ஏனெனில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். 63இன்றைக்கும் ஜனங்கள் அவ்வாறு கூறுகின்றனர். சற்று பொறும். நான் சபைக்கு சென்று, தசமபாகம் செலுத்தி, இதை, அதை, செய்கிறேனே. தேவன் என்னைப் புறக்கணித்துவிடுவாரா என்ன? ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தைப் புரிந்து கொள்ளவே மாட்டான். பாருங்கள்? எந்த சாக்கு போக்கும் கூடாது. பாருங்கள், அந்த வயோதிபர், அந்த வயோதிய ஸ்திரீ, அவர்கள் உத்தமமுள்ள ஆத்துமாக்கள் எனலாம். அவர்கள் தேவனைக் காண வேண்டுமானால், அதற்கான ஒரே வழி மறுபடியும் பிறப்பதே. அவ்வளவு தான், அவர்கள் சிறியவரோ, வயோதிபரோ வாலிபரோ, என்றோ, அவர்கள் என்ன செய்தனர், எவ்வளவாக சபைக்குச் சென்றனர். எத்தனை ஸ்தாபனங்களை அவர்கள் அறிந்துள்ளனர், எவ்வளவு பிரமாணங்களை அவர்கள் உச்சரிக்க முடியும் என்பதெல்லாம் குறித்து எனக்குக் கவலையில்லை. நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் தொடக்கத்திலேயே சரியான அஸ்திபாரத்தின் மேல் இல்லை. அது முற்றிலும் உண்மை. 64எனவே பாருங்கள், உங்களுக்கு வழிகாட்டி அவசியம். அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். வசனமே சாத்தியம். அவர் உங்களை நடத்துவார். எக்காலத்தும் அது அவ்வாறே இருந்து வந்துள்ளது. தேவன் எதையுமே மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் முடிவற்றவர். எது சிறந்தது என்று அவருக்குத் தெரியும் அவர் எங்கும் பிரசன்னர், எல்லாம் அறிந்தவர், எல்லாமே அவர். அது உண்மை. எனவே அவர் மாற்ற வேண்டிய அவசியமேயில்லை. சரி. அவர் வழியை உறுதிப்படுத்துகிறவர். அவர் நடத்திச் செல்கின்றார். வழிகாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர், அவர் போதிக்கும் அதே வார்த்தையை உறுதிப்படுத்துகிறவராயிருக்கிறார். லூக்கா (மாற்கு - தமிழாக்கியோன்) வழிகாட்டியால் நடத்தப்பட்டு, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று கூற ஏவப்பட்டான். (மாற் 16:15-18). வழிகாட்டியால் அவர்கள் வழிநடத்தப்பட்டு, ”எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்'' என்று வேதம் கூறுகின்றது. அப்பொழுது அடையாளங்கள் பின் தொடர்ந்தன. அது என்ன? அது சத்தியம் என்பதை வழிகாட்டி உறுதிப்படுத்தினார். 65அதுவே தேவனுடைய கொள்கை. அவருடைய திட்டம் அவ்வாறே அமைந்துள்ளது. அதிலிருந்து அவர் மாற முடியாது. ஏனெனில் அவர் முடிவற்றவர். ஆமென். அதிலிருந்து அவர் மாறவே முடியாது. அவர் தேவன். நான் மாறுவேன். ஏனெனில் நான் மனிதன். நீங்கள் மாறுவீர்கள். ஏனெனில் நீங்கள் மானிடர். ஆண்களும் பெண்களும், ஆனால் தேவனோ மாறமுடியாது. நான் முடிவுள்ளவன். நான் தவறுகள் செய்யக் கூடும். நான் தவறானவைகளைச் சொல்லக் கூடும். நாமெல்லாருமே அப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம். ஆனால் தேவனோ அப்படி செய்து, தேவனாயிருக்க முடியாது. அவர் எடுக்கும் முதல் தீர்மானமே பிழையற்றதாயிருக்கும். தேவன் முதன் முறையாக செய்யும் கிரியையே ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியவராயிருக்கிறார். பாவியை இரட்சிக்க அவர் காட்சிக்கு அழைக்கப்படும் போது, ஒன்றை ஆதாரமாகக் கொண்டு அவர் இரட்சிக்கிறார். அடுத்த முறை அவர் பாவியை இரட்சிக்கும் போது, அதே விதமாய் அவர் கிரியை செய்ய வேண்டியவராயிருக்கிறார். இல்லாவிடில், அவர் முதன் முறையே தவறாக கிரியை செய்தாரென்று அர்த்தம். ஆமென். அவரை நான் நேசிக்கிறேன். அது உண்மையென்று எனக்குத் தெரியும். 66எனக்கு இப்பொழுது ஐம்பத்துமூன்று வயதாகின்றது. முப்பத்து மூன்றரை ஆண்டுகாலமாக நான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருகிறேன். ஒரு முறையாவது அது தவறினதை நான் காணவில்லை. உலகம் பூராவும் வெவ்வேறு மார்க்கங்களின் மத்தியில், ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் ஜனங்களின் மத்தியில், இப்படி ஏழு முறை அது பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு போதும் தவறியதில்லை. நான் ஒரு புத்தகத்தை படித்து பேசவில்லை. என் சொந்த அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு பேசுகிறேன். தேவன் தமது வார்த்தையின் பின்னால் இருந்து கொண்டு அதை கௌரவிக்கிறார் என்று நானறிவேன். நீங்கள் ஏதாவது கோட்பாடுகளைக் கொண்டிருப்பீர்களானால், சற்று கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை ஆதரிக்கிறவராயிருக்கிறார். பரி. யோவான் முதலாம் அதிகாரம் முதலாம் வசனத்தில், அவர் வார்த்தை, அவர் வழிகாட்டி. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்“ என்று கூறப்பட்டுள்ளது. (யோவான்1:1,14). என்னே! 67பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அப். 2:38ல் கூற பேதுரு வழிநடத்தப்பட்டான். அவன், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வெருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அங்கிருந்து வழிகாட்டி உங்களை நடத்திச் செல்வார்'' என்றான். ஆம், செய்ய வேண்டியது அது தான், முதலாவதாக உங்கள் பாவங்களுக்காகவும், உங்கள் அவிசுவாசத்திற்காகவும், இதையெல்லாம் நீங்கள் விசுவாசிக்கவில்லை என்பதற்காகவும், மனந்திரும்புங்கள். மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அங்கிருந்து வழிகாட்டி உங்களை நடத்திச் செல்வார். பாருங்கள், அது உங்கள் கடமை. மனந்திரும்ப வேண்டியது உங்கள் கடமை, ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவேண்டியது உங்கள் கடமை, அங்கிருந்து உங்களை நற்பண்புக்கும், ஞானத்திற்கும், இச்சையடக்கத்திற்கும், பொறுமைக்கும், தேவபக்திக்கும், சகோதர சிநேகத்திற்கும் வழிநடத்திச் செல்ல வேண்டியது வழிகாட்டியின் கடமையாகும். அந்த நிலையையடைந்த பின்பு பரிசுத்த ஆவியானவர் உங்களை முத்தரிக்கிறார். நீங்கள் தேவனில் பரிபூரண வளர்ச்சியையடைந்து, தேவனுடைய பூரண புருஷராகவும், பூரண ஸ்திரீகளாகவும் மாறி கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்படுகிறீர்கள். அது எனக்கு மிகப் பிரியம். கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்படுதல் என்பது. 68ஆம், மாற்கு 16ம் அதிகாரத்தை எழுத மாற்கு பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்பட்டான். நிச்சயமாக. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை எழுத யோவான் வழிகாட்டியால் வழி நடத்தப்பட்டான். இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் அல்லது இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால், ''தேவன் அவனுடைய பங்கை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவார்“ என்று கூற அவன் வழிகாட்டியால் வழிநடத்தப்பட்டான். அப்படியிருக்க, நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக வேறொன்றை நுழைத்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதாக எப்படி கூற முடியும்? அதில் எந்தவித அர்த்தமும் இல்லை. இல்லையா?இல்லை, ஐயா. அதில் அர்த்தமேயில்லை. 69என் வாழ்க்கை பூராவும் அவர் வழிகாட்டியாய் இருந்து வந்திருக்கிறார். அவர் என்னை ஜீவனுக்கு வழி நடத்தியிருக்கிறார். அவர்தான் என்னை ஜீவனுக்கு வழி நடத்தினார். அவரே என் ஜீவன். அவரில்லாமல் எனக்கு ஜீவனேயில்லை. அவரில்லாமல் வேறெதும் எனக்கு வேண்டாம். அவரே எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறார். என் துன்ப நேரத்தில் அவர் என் பக்கத்தில் இருக்கிறார். நேற்று அவர் என்னை ஆசிர்வதித்தார், இன்றைக்கும் அதையே செய்கிறார். வேறெதை நான் எதிர் பார்க்க முடியும்? அவர் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய நாமத்திற்கு துதியுண்டாவதாக! ஆமென். ஆம், ஐயா, அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் நிறைவேற்றுவார். அவரே என் ஜீவன், அவரே என் வழிகாட்டி. எல்லாவற்றிற்கும் எல்லாமுமானவர். அவரை நான் நம்பியிருக்கிறேன். எனக்குக் கடினமான சோதனைகள் நேர்ந்தன. நான் எங்கு சென்றுலும், அவரையே நம்பியிருக்கிறேன், நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். பெண்களே, நீங்கள் துணிகளை சலவை செய்யச் செல்லும் போது, அவரையே நம்பியிருங்கள். நீங்கள் கீழே பட்டினத்துக்கு செல்லும்போது அவரையே நம்பியிருங்கள். 70காட்டுப் பிரதேசங்களில் செல்வதில் நான், கைதேர்ந்தவன் என்னும் எண்ணம் எனக்கு ஒருமுறை தோன்றிற்று. பாருங்கள், நான் அதிகமாக வேட்டையாடியவன். எனவே நான் காட்டில் வழி தவறவே முடியாது என்ற எண்ணம் கொண்டிருந்தேன். என் தாய் பாதி சிவப்பு இந்தியர். எனவே காட்டுக்குச் செல்வதை நான் அதிகம் விரும்பினேன். நான் காட்டில் வழி தவறவே முடியாது, அங்கு நான் எங்கிருக்கிறேன் என்பதை நன்கு அறிவேன் என்று எண்ணியிருந்தேன். எங்கள் தேன் நிலவின்போது... என் மனைவியை அவ்விஷயத்தில் ஒரு விதமாக சற்று ஏமாற்றினேன். நான் அவளிடம், “அன்பே, அக்டோபர் 23ம் தேதியன்று நாம் விவாகம் செய்து கொள்வது நல்லது'' என்றேன். அன்று தான் நான் விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்று கர்த்தர் என்னிடம் கூறியிருந்தார். ஒரு சிறு தேன்நிலவுக்குச் செல்லலாமென்று நான் தீர்மானித்தேன். அதற்காக காசை சேமித்து வைத்திருத்தேன். என் மனைவியை நயாகரா நீர் வீழ்ச்சிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து அடிரோன்டாக் மலையின் மேலேறி சற்று வேட்டையாடலாம் என்று தீர்மானித்தேன். நான் மனைவியையும் பில்லியையும் கூட்டிச் சென்றேன். அப்பொழுது பில்லி சிறுவன். அவளை நான் தேன்நிலவுக்குக் கொண்டு சென்றேன். அது வேட்டை பயணமும் கூட. அப்படி செய்வது நல்லதென்று எண்ணினேன். நான் அவளை மேலே கூட்டிச் சென்றேன். 71நான் காட்டு அதிகாரி திரு. டென்டனுக்கு கடிதம் எழுதினேன். நாங்கள் ஹரிக்கேன் மலையின் மேலும் செல்லத் தீர்மானித்திருந்ததால், நான் கடிதத்தில், “திரு. டென்டன் அவர்களே, நான் மலையின் மேல் வரப் போகிறேன். உங்களுடன் குளிர் பருவத்தில் கரடி வேட்டையாட விரும்புகிறேன்'' என்று எழுதியிருந்தேன். அவரும், “சரி, பில்லி, மேலே வாருங்கள்'' என்று பதில் எழுதியிருந்தார். ஒரு பிரத்தியேக நாளை அவர் குறிப்பிட்டு, அந்த நாளில் நான் அங்கிருப்பேன்”, என்று எழுதியிருந்தார். நானும் மனைவியும் பில்லியும் ஒரு நாள் முன்னதாகவே அங்கு சென்றுவிட்டோம். அவருடைய அறை பூட்டியிருந்தது. காட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமெனும், எண்ணம் எனக்குள் தோன்றியது. அந்த இடத்திற்கு தான் நானும் சகோ. ஃபிரட் சாத்மனும் அண்மையில் சென்றிருந்தோம். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஒளி வடிவத்தில் புதரில் அசைந்து கொண்டிருந்தார். ஃபிரட் அங்கு நின்று கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் என்னிடம், ''சற்று தனியே வா நான் உன்னுடன் பேச வேண்டும்“ என்றார். நான் சென்ற போது அவர் என்னிடம், ”நாளை கவனமாயிரு. அவர்கள் உனக்கு கண்ணி வைத்திருக்கின்றனர்“ என்றார். சகோ ஃபிரட், அது சரியா? அன்றிரவு நான் வெர்மாண்டுக்கு சென்று நூற்றுக்கணக்கான ஜனங்களிடம், ”எனக்கு கண்ணி வைக்கப்பட்டுள்ளது. அதை நான் பார்க்கத் தான் போகிறேன். அது எந்தவிடத்தில் என்று தெரியவில்லை“ என்றேன். அடுத்த இரவே அது நிகழ்ந்தது. அவர், ”இந்தவிடத்தில் தான் உனக்கு கண்ணி வைக்கப்பட்டுள்ளது“ என்றார் . ஆம், ஐயா! நான் என்ன செய்ய வேண்டுமென்று அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தினார். ஓ! என்னே, அவர் கூறினது உண்மையாயிருந்தது. உங்களில் அநேகருக்கு அது தெரியும், அதை முழுவதும் கூற எனக்கு நேரமில்லை. 72அதேயிடத்தில் நானும் என் மனைவியும் பில்லியும் நின்று கொண்டிருந்த போது, அங்கு குளிரத் தொடங்கினது. திரு. டென்டன் அடுத்த நாள் தான் வருவார். எனவே நான் மனைவியிடம், “அன்பே, ஒரு ஆண் மானை (buck) நாம் வேட்டையாடிக் கொண்டு சென்றால் நலமாயிருக்கும் என்னிடமுள்ள பணத்தை நான் மிச்சப்படுத்த வேண்டும். ஏனெனில் இப்பொழுது தான் நமக்கு விவாகமாகியுள்ளது இன்று வேட்டை கிடைத்தால், குளிர் காலத்திற்கு வேண்டிய மாமிச ஆகாரம் நமக்கு கிடைத்துவிடும்”, என்றேன். அவளும், “சரி, பில்லி, போய் வாருங்கள். ஆனால் காட்டில் இதற்கு முன்பு நான் இருந்ததில்லை என்பதை மாத்திரம் ஞாபகம் கொள்ளுங்கள்” என்றாள். மேலும் அவள், ''நான் மலையில், இருபத்தைந்து மைல்களுக்கு மேல் இருக்கிறேன் என்று தெரியுமா, என்றும் எனக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது“, என்று சொன்னாள். மேலும் அவள் சொன்னாள், ஆனால் நான்... 73நான் அவளிடம், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் மூன்று கரடிகளை இந்தவிடத்தில் கொன்றேன். அது அந்த பக்கம் மலையின் உச்சியில்” என்று கூறிவிட்டு, ''பெரிய ஆண்மான் ஒன்றை வேட்டையாடிக் கொண்டு வருகிறேன். நமக்கு கரடியும் கிடைக்கலாம். மான் நமது குளிர்கால ஆகாரமாயிருக்கும்“ என்றேன். அது மிகவும் நல்லதாக தென்பட்டது. (அந்த குளிர்காலத்தில் நான் வேலையிலிருந்து வீடு திரும்பினவுடன், நானும் மேடாவும் மாலையில் பழங்களைப் பொறுக்குவோம். பில்லி அதை விற்று வருவான். அந்த காசைக் கொண்டு நாங்கள் நிலக்கரி வாங்குவோம்). நான் அவளிடம், ”என் துப்பாக்கியுடன் அங்கு போகப் போகிறேன். அங்கு நிறைய மான்கள் உள்ளன. ஒன்றாகிலும் என் கண்ணில் படும். அதை வேட்டையாடிக் கொண்டு வருவேன். சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவேன்'' என்றேன். அவளும், “சரி” என்றாள். 74நான் புறப்படும் போது சற்று குளிராயிருந்தது. மூடுபனி இறங்கினால் என்ன நேரிடுமென்று நியூ ஹாம்பஷயர், அல்லது சற்று உயரேயுள்ள நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த உங்களில் சிலருக்குத் தெரியும். மலையின் மேல் எங்காவது மூடுபனி இறங்கினால், நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவே தெரியாது. அவ்வளவு தான். உங்களுக்கு முன்னால் உங்கள் கையை நீட்டினால், அதைகூட காணமுடியாது. நான் கீழே இறங்கி, முகடை (ridge) கடந்து, மேலேறினேன். அப்பொழுது ஒரு சிறுத்தையைக் கண்டேன். அதை நாம் வெவ்வேறு பெயரினால் அழைக்கிறோம். அது ஒன்பது அடி நீளம், 150 அல்லது 200 பவுண்டு எடையிருக்கும். அது கடந்து சென்றபோது, துப்பாக்கியை வேகமாக கையிலெடுத்தேன்; ஆனால் அதை சுடுவதற்கு போதிய அளவு வேகமாக எடுக்கவில்லை. 75அது சென்ற திசையில் இலைகளின் அசைவை கவனித்துக் கொண்டே நான் துரத்திச் சென்றேன். இலைகளின் அசைவை என்னால் கேட்க முடிந்தது. அதற்கு நான்கு கால்கள் உண்டு. அதன் அடிச்சுவடுகளிலிருந்து அது இரண்டுகால் மிருகமல்ல என்று அறிந்து கொண்டேன். அது மான் அல்ல என்றும் எனக்குத் தெரியும். ஏனெனில் மான் குதித்து ஓடும். ஆனால் சிறுத்தையோ எளிதாக நழுவிவிடும். கரடி நடக்கும்போது, காலை உருட்டிக் கொண்டே நடக்கும். எனவே அது சிறுத்தைதான் என்று அறிந்து கொண்டேன், அது மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தது. அதை நான் கவனிக்கவில்லை. ஆனால் நான் பார்த்த மாத்திரத்தில் அது மறைந்துவிட்டது. மலையுச்சியில் அது இலைகளை அசைத்துக் கொண்டு போகும் விதத்தையே கவனித்துக் கொண்டிருந்ததால், மூடுபனி இறங்குவதை நான் கவனிக்கவில்லை. இந்த சிறுத்தையைப் பின்தொடர்ந்தே பள்ளத்தாக்கின் வழியாகவும் மலையின் மேலும் நான் சென்று கொண்டிருந்தேன். அதை எப்படியாவது பார்த்துவிடுவேன் என்று எண்ணினேன். நான் உயரமான ஓரிடத்திற்கு ஓடிச் சென்று, சுற்றும் முற்றும் பார்த்து தேடுவேன். ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கூர்ந்து கவனிப்பேன். பின்பு கீழே இறங்கி வருவேன். இந்த சிறுத்தை சாமர்த்தியமாக மரத்திற்கு மரம் தாவிச் சென்றதால், மரக்கிளைகள் முறிந்து விழும் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. ஆனால் அதன் அடிச்சுவடுகளை என்னால் பின் தொடர முடியவில்லை. 76நான் திரும்ப பள்ளத்தாக்குக்கு வந்தபோது, ''அங்கு ஒரு கிழ ஆண் கரடியை முகர்ந்தேன். எப்படியாவது அது கிடைத்துவிடும்“ என்று எண்ணினேன். நான் மறுபடியும், முகர்ந்து நோக்கினேன் நான் சற்று தூரம் சென்று ஏதாவது அடையாளம் தெரிகின்றதா என்று கவனித்தேன். எதையும் என்னால் காணமுடியவில்லை. நான் கீழே இறங்கி வந்து, மறுபடியும் மலைக்குச் சென்றேன். அப்பொழுது மூடு பனி இறங்குவதை கவனித்தேன். நான் மறுபடியும் முகர்ந்து நோக்கினேன். அந்த கரடி அங்குதான் எங்கோ இருந்தது. நான், ”காற்று இந்தப் பக்கம் அடிக்கிறது, ஆனால் கரடியின் மணம் மறுபக்கத்திலிருந்து வருகிறதே'' இருக்காது, நான் கடந்து வந்துவிட்டேன். காற்று அந்த பக்கத்திலிருந்து வருகிறது. எனவே, ''நான் முதன் முறையாக கரடி மணத்தை முகர்ந்த இடத்திற்கு திரும்பிச் சென்று அங்கிருந்து வர வேண்டும்'', என்று நினைத்தேன். 77நான் திரும்பிச் சென்று கொண்டிருந்த பாதை மயிலிருந்து பள்ளத்தாக்கைப் பார்த்தபோது, ''புதர்கள் அசைவதைக் கண்டேன். கறுத்த ஒன்று அங்கு அசைந்தது, அது அங்கிருக்கிறது'' என்று நினைத்து. தோட்டாவை துப்பாக்கியில் வேகமாக நிறைத்து, அசையாது அங்கு நின்று கொண்டிருந்தேன். அது ஒரு பெரிய ஆண் மான். மிகப் பெரியது. ''இது எனக்கு வேண்டுமென்று எண்ணியிருந்தேன்“ என்று நினைத்து அந்த ஆண் மானைச் சுட்டேன். ''நல்லது“, என்று நினைத்தேன். என் கைகளைத் துடைத்து, என் கத்தியை ஆயத்தப்படுத்தி, அதை மறுபடியும் உறையில் போட்டேன். நான், ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. குளிர் காலத்திற்கு வேண்டிய மாமிச ஆகாரத்தை எனக்குத் தந்துவிட்டீர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று நினைத்துக் கொண்டு துப்பாக்கியைக் கையிலெடுத்தேன். ”நான் பள்ளத்தாக்கு செல்லட்டும்“ என்று எண்ணினேன். அப்பொழுது புயல் வரத் தொடங்கினது. இதோ புயல் வருகிறதே, ''நான் துரிதமாக மேடாவிடம் செல்லட்டும். நான் வேகமாக செல்லவேண்டும்'' என்று நினைத்துக் கொண்டேன். 78நான் பள்ளத்தாக்குக்கு மேலே சென்று, என் சிவப்பு கோட்டை கழற்றினேன். நான் இவ்வாறு பள்ளத்தாக்குக்கும் மேலே ஓடினேன். நான் திசை தவறிவிட்டேன். “நான் எங்கிருந்து புறப்பட்டேன்?” என்று யோசிக்கத் தொடங்கினேன். காற்று வேகமாக அடிக்கத் தொடங்கிவிட்டது. மரங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. நான் நேராக ஹரிக்கேன் மலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சற்று நேரம் நின்றேன். எனக்கு வியர்க்கத் தொடங்கினது. என்ன நேர்ந்தது? நான் அரைமணி நேரம் முக்கால் மணி நேரமாக சென்று கொண்டிருக்கிறேன், ''நான் புறப்பட்டு வந்த இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே!“ என்று நினைத்துக் கொண்டே மேலே நோக்கினபோது, நான் சுட்ட அந்த மான் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. நான் மீண்டும் அந்த இடத்திற்கே வந்துவிட்டேன். ”நான் என்ன செய்தேன்?'' என்று வியந்தேன். 79நான் மறுபடியும் புறப்பட்டேன். இந்த முறை எப்படியாவது கண்டு பிடித்துவிடுவேன். ''நான் சரியாக கவனிக்கவில்லை“ என்று நினைத்தேன். நான் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து, தேடிக் கொண்டே சென்றேன். நான் தேடினேன், தேடினேன், மேகங்கள் வரத் தொடங்கின, பனிப்புயல் வரப் போகின்றது என்று எனக்குத் தெரியும், மூடுபனி கீழே இறங்கியிருந்தது. ”இன்னும் சிறிது தூரம் செல்லலாம்“ என்று எண்ணியவனாய் நடந்து சென்றேன், சென்றேன், சென்றேன். ”மிகவும் வினோதமாயுள்ளதே. இந்த இடத்தை நான் முன்பு கண்டிருக்கிறேனே“ என்று நினைத்தேன். நான் பார்த்தபோது, நான் சுட்ட அந்த மான் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. நான் மீண்டும் அதே இடத்திற்கு வந்துவிட்டேன். நான் என்ன செய்து கொண்டிருந்தேன், தெரியுமா? இதை தான் சிகப்பு இந்தியர்கள், மரண நடை (Death walk) என்று அழைக்கின்றனர். பாருங்கள், வட்டம் சுற்றி, சுற்றி அதே இடத்திற்கு வருதல், நான் மிகவும் கைதேர்ந்த வழிகாட்டியென்றும், நான் ஒரு போதும் வழிதவறவே முடியாதென்றும் எண்ணியிருந்தேன். யாருமே எனக்கு காட்டில் வழிகாட்ட வேண்டிய அவசியமில்லை, எனக்கு எல்லா பாதையுமே நன்றாகத் தெரியும் என்று நினைத்திருந்தேன். பாருங்கள்? நான் மீண்டும் புறப்பட்டேன். ''இம்முறை அதே தவறை புரியமாட்டேன்“ என்று நினைத்தேன். ஆனால் மறுபடியும் அதே இடத்திற்கு வந்துவிட்டேன். 80நான் பள்ளத்தாக்குக்கு சற்று மேலே சென்றேன். அப்பொழுது புயல் அடிக்கத் தொடங்கினது. எங்கு பார்த்தாலும் பனி! இருட்டாகிவிட்டது. ''மேடா இரவில் காட்டில் மரித்துப் போவாள் என்று பயந்தேன். ஏனெனில் காட்டில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவளுக்குத் தெரியாது. பில்லி அப்பொழுது மூன்று வயது சிறுவன். அவர்கள் என்ன செய்வார்கள்“ என்று பயந்தேன். நான் சிறிது அடி எடுத்து காலை வைத்தபோது, ''பாசி குளத்தில் கால் வைத்துவிட்டேன். எங்கு பார்த்தாலும் மூடுபனி. எதையும் என்னால் காண முடியவில்லையே'' என்று நினைத்தேன். சாதாரணமாக இப்படிப்பட்ட சூழ்நிலையில், யாராகிலும் என்னுடன் இருந்திருப்பார்களானால், நான். ஓரிடத்தை அடைந்து, புயல் தீரும் மட்டும் ஒரிரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருப்பேன். நான் சுட்டுக் கொன்ற மானை அறுத்து, சமைத்து புசித்து. இதைக் குறித்து கவலையேபடாமல் இருந்திருப்பேன். ஆனால் என் மனைவியும் பிள்ளையும் காட்டில் மரிக்கும் தருவாயில் உள்ளபோது, என்னால் அப்படி செய்யமுடியாது. 81எனவே, “என்ன செய்யலாம்?” என்று யோசிக்கத் தொடங்கினேன். நான் சற்று தூரம் நடந்து சென்றேன். நான் முதல் பள்ளத்தாக்கை கடந்து வந்தபோது, ''காற்று என் முகத்தில் அடித்தது. எனவே நான் இந்த வழியாகத் தான் வந்திருக்க வேண்டும். இந்த வழியில் தான் நான் செல்ல வேண்டும்“என்று யோசித்தேன். நான் கணவாய்களின் வழியாக அலைந்து திரிந்தேன். ஆனால் நான் எங்கிருக்கிறேன் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு திகில் உண்டானது. ”பில், ஒரு நிமிடம் பொறு. நீ காணாமற் போகவில்லை“யென்று என்னிடமே நான் பொய் சொல்ல முயன்றேன். அப்படி நீங்கள் பொய் சொல்ல முடியாது. உங்கள் உள்ளான மனச்சாட்சி நீங்கள் தவறென்று உங்களிடம் கூறும். நீங்கள், “நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நான் சபைக்குச் செல்கிறேன் என்று கூறலாம். மரணப்படுக்கை வரும்வரை காத்திருங்கள். காரியம் வித்தியாசமாயுள்ளதென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள்'', உங்கள் மனச்சாட்சி, உங்களுக்குள் இருக்கும் ஒன்று, நீங்கள் தவறென்று உங்களிடம் கூறும். பாருங்கள்? நீங்கள் மரித்துப் போனால், பரிசுத்தமுள்ள தேவனை உங்களால் சந்திக்க முடியாது என்று உங்களுக்கு தெரியும். கடந்த இரவு நாம் பார்த்த விதமாக, அவருக்கு முன்பாக நிற்க, பரிசுத்த தேவ தூதர்களும் கூட தங்கள் முகங்களை மறைக்க வேண்டியதாயுள்ளது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களை மறைக்காமல் போனால், நீங்கள் எப்படி அவர் சந்நிதியில் நிற்க முடியும்? 82“நான் எப்படியாகிலும் வழி கண்டு பிடித்துவிடுவேன்” என்று நினைத்தவாறே, காட்டில் நடந்து செல்லத் தொடங்கினேன். அப்பொழுது ஏதோ ஒரு சத்தம் கேட்கத் தொடங்கினது. எனக்கு பயமுண்டாயிற்று. இப்படியே செய்தால், ''நான் துண்டு துண்டாகப் போய் விடுவேன்“ என்று எண்ணினேன். காட்டில் பாதை தவறிய மனிதனுக்கு. அது தான் நேரிடும். அவன் துண்டு துண்டாகப் போய்விடுவான். அவன் துப்பாக்கியை எடுத்து தன்னை சுட்டுக் கொள்வான், அல்லது ஒரு குழியில் விழுந்து காலை ஒடித்துக் கொண்டு, அங்கேயே விழுந்து மரித்துப் போவான். ”நான் என்ன செய்வேன்?“ என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்லத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு சத்தம், ஆபத்துக் காலத்தில் தான் அனுகூலமான துணை என்று சொல்லிக் கொண்டேயிருப்பதை நான் கேட்டேன். நான் நடந்து கொண்டே சென்றேன். “இப்பொழுது, எனக்கு பயம் சற்று தெளிந்துவிட்டது. ஒரு சத்தம் என்னுடன் பேசுகின்றது” என்று நினைத்து நடந்து செல்லத் தொடங்கினேன். அந்த சத்தம் 'வ்யூ, வ்யூ, வ்யூ' என்னும் விசில் ஓசையை உண்டாக்கியது, சற்று முன்பு தான், நான், “பில்லி, நீ காணாமற் போகவில்லை. நீ எங்கிருக்கிறாய் என்று உனக்குத் தெரியும். நீ காணாமற் போகவே முடியாது. நீ சிறந்த வேட்டைக்காரன். நீ காணாமற் போகவே முடியாது'' என்று பெருமையடித்துக் கொண்டு என்னிடமே பொய் சொல்லிக் கொண்டேன். அவ்வாறு நாம் பொய் சொல்லமுடியாது. ஏனெனில் இங்கு ஒரு சிறிய சக்கரம் சுழன்று, ''நீ வழி தவறிவிட்டாய். அது உனக்குத் தெரியும்“ என்று சொல்லும். 83“நான் வழி தவறவில்லை.நான் எப்படியாவது வழி கண்டு பிடித்து விடுவேன்'' என்று நினைத்துக் கொண்டே நடந்து சென்றேன். காரியங்கள் வினோதமாகத் தொடங்கின, காற்று அடித்து, பனி இங்கும் அங்கும் பறக்கத் தொடங்கினது. என் மனைவியையும் பிள்ளையையும் நினைக்கத் தொடங்கினேன் மறுபடியும், “ஆபத்துக்காலத்தில் நான் அனுகூலமான துணை'' என்னும் சத்தத்தை நான் நேரடியாகக் கேட்டேன். அப்பொழுது நான் ஒரு போதகராக, இக்கூடாரத்தில் பிரசங்கம் செய்யும் போதகராக இருந்தேன். “என்ன செய்யலாம்?” என்று நினைத்தேன். நான் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். மூடுபனி முழுவதுமாக இறங்கிவிட்டது. அவ்வளவுதான். வேறொன்றும் செய்ய முடியாது. “என்ன செய்யலாம்?” என்று திகைத்தேன் நான், “ஐயா, நான் வாழத் தகுதியற்றவன். எனக்கு அதிக தன்னம்பிக்கை இருந்தது. நான் பெரிய வேட்டைக்காரன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நான் அப்படியல்ல என்று நினைத்துக் கொண்டேன். 84சகோதரனே, நான் எப்பொழுதும் அவரையே நம்பியிருக்கிறேன். துப்பாக்கி சுடுதலில் நான் அநேக சாதனைகள் புரிந்திருக்கிறேன். மீன் பிடிப்பதிலும் நான் ஒன்றுமற்றவன். ஆனால் நான் எப்பொழுதும் அவரையே நம்பியிருக்கிறேன். சுடுவதிலும் நான் ஒன்றுமற்றவன். ஆனால் அவரோ தான் உலக சாதனைகள் புரியும்படி செய்திருக்கிறார். பாருங்கள்? எழுநூறு, எண்ணூறு கெஜ தூரத்திலிருந்து நான் மானைச் சுட்டுக் கொன்றிருக்கிறேன். ஒரு குறி கூட தவறாமல், முப்பந்தைந்து மிருகங்களைக் கொன்றிருக்கிறேன். அப்படிப்பட்ட சாதனைகளை நீங்கள் எங்காகிலும் படித்ததுண்டா? நானல்ல, ''அவரே, அவரை நான் நம்பியிருக்கிறேன்.“ நான் அங்கே நின்று, ''என்ன செய்வது?“ என்று திகைத்தேன். அப்பொழுது அந்த சத்தம் அருகில் வரத் தொடங்கினது: “ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணை, அனுகூலமான துனை” ''கர்த்தர் என்னுடன் பேசுகின்றாரா?“ என்று நினைத்தேன். நான் தொப்பியைக் கழற்றினேன். நான் உலாவும் காவலர் (Patrol) தொப்பியை அணிந்து கொண்டிருந்தேன். ஒரு சிவப்பு கைகுட்டை அதில் சுற்றப்பட்டிருந்தது. என் தொப்பியை கீழே வைத்தேன். என் கோட்டை கழற்றினேன். அது நனைந்திருந்தது. அதை கீழே வைத்துவிட்டு, துப்பாக்கியை மரத்தில் சாய்த்து வைத்தேன். நான், ''பரலோகப் பிதாவே, என் திறனுக்கு மீறின நிலைக்கு வந்துவிட்டேன், என்னுடன் பேசும் ஒரு சத்தத்தைக் கேட்கிறேன். அது நீர் தானா” என்றேன். நான், நான் ஒரு வேட்டைக்காரன் அல்லவென்று உம்மிடம் ஒப்புக் கொள்ளப் போகிறேன், என் வழியை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு நீர் உதவி செய்யவேண்டும். எனக்கு அதிகம் தெரியும் என்றும், நான் காட்டில் வழி தவறவே மாட்டேன் என்றும், நினைத்து இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ததால் நான் இனி மேல் வாழத் தகுதியற்றவன். ஆண்டவரே, நீர் எனக்குத் தேவை. என் மனைவி நல்லவள். என் குழந்தை, அவனுடைய தாய் மரித்துவிட்டாள். இவள் அவனுக்குத் தாயாக இருக்க முயன்றாள், அவளை இப்பொழுது தான் நான் விவாகம் செய்தேன். அவளும் குழந்தையும் காட்டில் இருக்கின்றனர். இருவரும் இன்றிரவு மரித்துவிடுவார்கள். அந்த காற்று உஷ்ணத்தை பூஜ்யத்துக்கு கீழே பத்து டிகிரிக்கு கொண்டு வந்துவிடும். அந்த குளிரில் எப்படி உயிர் வாழ்வதென்று அவர்களுக்குத் தெரியாது. இன்றிரவு அவர்கள் மரித்துவிடுவார்கள். தேவனே, அவர்கள் மரிக்க விட்டுவிட வேண்டாம். என்னை அவர்களிடம் கொண்டு சேர்ப்பீராக! அப்பொழுது அவர்கள் மரிக்காமல் பாதுகாத்துக் கொள்வேன். நான் பாதை தவறிவிட்டேன். தேவனே, நான் பாதை தவறிவிட்டேன் என் வழியை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்குதவி செய்யமாட்டீரா? என் சுயநல போக்கை மன்னியும். உம்மையன்றி என்னால் ஒன்றும் செய்ய இயலாது, நீரே என் வழிகாட்டி ஆண்டவரே, எனக்குதவி செய்யும்“ என்று ஜெபித்தேன். 85நான் எழுந்து நின்று 'ஆமென்' என்றேன். என் கை குட்டையையும் என் கோட்டையும் கையிலெடுத்துக் கொண்டேன், தலையில் தொப்பியை அணிந்து கொண்டேன். என் துப்பாக்கியை கைலெடுத்தேன் நான், எனக்குத் தெரிந்தவரை சிறந்த வழியில் நான் நேரகாச் செல்லப் போகிறேன். நான் வட்டம் சுற்றி சுற்றி அதே இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். ''தேவனாகிய கர்த்தாவே, என் வழிகாட்டியே. நீர் காண்பிக்கும் வழியில் நான் செல்வேன்“ என்றேன். நான் இந்த வழியில் நடந்து செல்லத் தொடங்கினேன். நான், “இது தான் சரியான வழி. இந்த வழியில் நேராகச் செல்லப் போகிறேன். நான் வழிமாறப் போவதில்லை. இந்த வழியில் நேராகச் செல்லப் போகிறேன்'' என்று தீர்மானித்தேன். அந்த வழியில் சென்றிருந்தால், நான் கனடாவை அடைந்திருப்பேன். பாருங்கள்? 86அப்பொழுது யாரோ ஒருவர் என் தோளைத் தொடுவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அது ஒரு மனிதனின் கையைப் போல் தோன்றினது. நான் திரும்பிப் பார்த்தேன். யாரும் அங்கு நின்று கொண்டிருக்கவில்லை, “இது என்னவென்று அதிசயமுற்றேன், நான் கூறுவது உண்மை. வேதாகமம் எனக்கு முன்னால் உள்ளது, என் வழிகாட்டியும் நியாயதிபதியுமாகிய தேவன் இங்கு பிரசன்னராயிருக்கிறார். நான் மேலே நோக்கினேன்'', அப்பொழுது இந்த பக்கத்தில் மூடுபனி மறைந்து, ஹரிக்கேன் மலையின் மேலுள்ள கோபுரத்தை என்னால் காண முடிந்தது. எனக்கு வேட்டைத் திறன் இருந்த போதிலும், இவ்வளவு நேரமாக அந்த கோபுரத்தை விட்டகன்று சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது மாலை நேரமாகிவிட்டது. நான் திரும்பி, அந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். நான் தொப்பியைக் கழற்றி கைகளையுயர்த்தி, ''தேவனே, எனக்கு வழி காட்டும். நீரே என் வழி காட்டியென்று ஜெபித்தேன்''. நான் நடக்கத் தொடங்கினேன். நான் செங்குத்தான பாறைகளின் மேல் ஏறிச்செல்ல வேண்டும். அப்பொழுது இருட்டாகிவிட்டது. மான்கள் என் முன்னால் துள்ளி ஓடின. நான் எதையும் யோசனை பண்ணாமல், அந்த கோபுரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். 87அந்த கோபுரத்தை நான் அடைந்துவிட்டால், வசந்த காலத்தில் நானும் திரு. டென்டனும் தொலைபேசி கம்பிகளை அங்கு நாட்டினோம். ஹரிக்கேன் மலையிலிருந்து கீழே மூன்றரை நான்கு மைல்கள் வரை நாங்கள் ஒரு பாதையில் அந்த கம்பிகளை நாட்டினோம். ஆனால் பனியின் காரணமாக அந்த பாதை கண்ணுக்குத் தெரியவில்லை. காற்று பலமாக வீசினது இருட்டாகிவிட்டது. பனியும் பெய்து கொண்டிருந்ததால், எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. நான் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று... நான் ஒரே பாதையில் மலையின் மேலேறிக் கொண்டிருந்தேன். அந்த கோபுரத்தை அடைய ஆறு மைல்தூரம் இருந்தது. நான் கோபுரத்தைக் காணும் அளவிற்கு, ஆறு மைல் தூரம் வரைக்கும் மூடுபனி மறைந்தது என்பதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்! 88நான் ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு, மற்ற கையை உயர்த்தினவாறே, அந்த தொலைபேசி கம்பியைத் தேடி நடக்கத் தொடங்கினேன், அந்த தொலைபேசி கம்பி திரு. டென்டனின் அறையிலிருந்து மரங்களின் வழியாக கீழே கொண்டு வரப்பட்டிருந்தது. அவர் தம் மனைவியிடம் மலையிலிருந்து பேசுவதற்காக இந்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த தொலை பேசி கம்பியை நாட்ட அவருக்கு நான் வசந்த காலத்தில் உதவி செய்தேன். நான் கையை உயர்த்தினவாறு, “தேவனே, அந்த கம்பியை நான் தொடும்படி செய்யும் என்ற ஜெபித்தேன். கையையுயர்த்திக் கொண்டேயிருந்தால் அது இரணமாகிவிட்டது. அதிக களைப்பும் ஏற்பட்டது. அதை என்னால் உயர்த்திக் கொண்டேயிருக்க முடியவில்லை. எனவே துப்பாக்கியை இந்த கையில் பிடித்து மறு கையையுயர்த்தினேன். அந்த தொலைபேசி கம்பியை காணத் தவரக் கூடாது என்பதற்காக, இரண்டு அடி பின்னால் எடுத்து வைத்து, கையையுயர்த்தி, நடக்கத் தொடங்கினேன். இப்படியாக நடந்து கொண்டே சென்றேன். இருட்டாகிவிட்டது. காற்று பலமாக அடிக்கத் தொடங்கினது. நான் ஒரு மரக்கிளையை பிடித்து, ”இது தான்“ என்பேன், பார்த்தால் அது தொலைபேசி கம்பியாயிருக்காது. 89என்னால் முடியாது என்று முயற்சியை கைவிட்ட எத்தனித்த நேரத்தில் என் கை ஏதோ ஒன்றின்மேல் பட்டது. ஓ, என்னே! நான் காணாமற் போனபோது, கண்டு பிடிக்கப்பட்டேன். அந்த தொலைபேசி கம்பியை நான் இறுகப் பிடித்துக் கொண்டேன். நான் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு, தொப்பியை கழற்றி, அங்கு நின்று, “ஓ, தேவனே, காணாமற் போன பிறகு கண்டு பிடிக்கப்படும்போது, எத்தகைய நல்லுணர்வு ஏற்படுகின்றது. இந்த தொலைபேசி கம்பியின் மறுமுனையை அடையும்வரை இதை நான் விடமாட்டேன். நான் இறுகப் பிடித்துக் கொள்வேன். அது என்னை என் அருமையானவர்களிடம் வழிநடத்திச் செல்லும். அங்கு என் மனைவியும் குழந்தையும் நான் எங்கிருக்கிறேன் என்று அறியாமல் திகைத்து, தீ மூட்டுவது எப்படியென்று அறியாமல், என்ன செய்வதென்று பதறிப் போயிருப்பார்கள். காற்று பலமாக அடித்துக் கொண்டிருக்கிறது. மரக்கிளைகளும் முறிந்து விழுந்திருக்கும்” என்றேன். அந்த கம்பியை நான் விடவேயில்லை. அதை இறுகப் பிடித்துக் கொண்டேன். அது என் அருமையானவர்கள் இருந்த இடத்திற்கு என்னை வழிநடத்தினது 90அது ஒரு பயங்கரமான அனுபவம். காணாமற் போன நான் மீண்டும் என் வழியைக் கண்டு பிடித்தது ஒரு பெரிய அனுபவம். ஆனால் அது அவ்வளவு முக்கியமல்ல. ஒரு நாள் நான் பாவத்தில் மூழ்கி காணாமற் போனேன். ஏதோ ஒன்றைக் கண்டு பிடிக்க நான் ஒவ்வொரு சபைக்கும் சென்றேன். நான் ஏழாம் நாள் ஆசரிப்போரிடம் சென்றேன். அவர்கள், “ஓய்வு நாளைக் கைக் கொள். மாமிசம் புசிப்பதை நிறுத்திவிடு” என்றனர். நான் முதலாம் பாப்டிஸ்டு சபைக்குச் சென்றேன். அவர்கள், “நீ எழுந்து நின்று, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாக அறிக்கையிடு. அப்பொழுது நாங்கள் உனக்கு ஞானஸ்நானம் கொடுப்போம்'' என்றனர். அங்கெல்லாம் ஒன்றுமேயில்லை. ஆனால் ஒரு சிறிய நிலக்கரி கொட்டிலில் என் கரங்களையுயர்த்தி ஜெபித்த போது, நான் ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டேன். அதை இப்படி கூறலாம், ஏதோ ஒன்று என்னைப் பிடித்துக் கொண்டது. அது தான் ஜீவ கம்பி (Life Line), வழிகாட்டி. அவர் இது வரைக்கும் என்னைப் பாதுகாப்பாக நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். அந்த கம்பியிலிருந்து என் கையை நான் எடுத்து விடப்போவதில்லை. என் கரங்களால் அவரைப் பிடித்து கொண்டிருக்கிறேன் பிரமாணங்கள், கோட்பாடுகள், ஸ்தாபனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நானோ வழிகாட்டியை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு விலையேறப்பெற்றதாயுள்ள இப்பூமியலுள்ள அனைத்தும், பரலோகத்திலுள்ள அனைத்தும் இக்கம்பியின் முடிவில் தான் உள்ளன. இவ்வளவு தூரம் அவர் என்னைப் பாதுகாப்பாக கொண்டு வந்திருக்கிறார். எஞ்சியுள்ள வழியில் செல்வதற்கும் நான் அவரையே நம்பியிருக்கிறேன். “பரிசுத்த ஆவியாகி அவர் வரும் போது, உங்களை எல்லா வெளிச்சத்திற்கும் நடத்துவார்.'' 91நண்பர்களே, அந்த பரிசுத்த ஆவியானவர் இன்று தான்உள்ள நிலை வரைக்கும் என்னை வழிநடத்திக் கொண்டு வந்திருக்கிறார். அவர் என்னை இந்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். இவ்வுலகிற்கும், மேலேயுள்ள மறு உலகிற்கும், அவர் ஒருவர் மாத்திரமே வழி காட்டியென அறிந்திருக்கிறேன். நான் வேட்டைக்குச் செல்லும் போது அவரே எனக்கு வழிகாட்டி. நான் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவரே எனக்கு வழிகாட்டி. யாருடனும் நான் பேசும் போதும் அவரே எனக்கு வழிகாட்டி. நான் பிரசங்கம் செய்யும் போது, அவரே எனக்கு வழிகாட்டி, நான் உறங்கும் போது, அவரே எனக்கு வழிகாட்டி. நான் மரிக்கும் போது, அவர் அந்த நதியில் நின்று கொண்டு, என்னை அதன் வழியாக வழி நடத்துவார். நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். உமது தடியும் என்னைத் திருத்தி, நதியைக்கடக்க வழி நடத்தும். நாம் ஜெபம் செய்வோம். 92பரலோகப் பிதாவே, என்னை வழிநடத்தும் அந்த வழிகாட்டிக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஓ, சில நேரங்களில், பிதாவே, அவருடைய சத்தத்தை என்னால் கேட்க முடியவில்லை. அப்பொழுது எனக்கு பயம் உண்டாகிறது. அவர் எப்பொழுதும் என் அருகில் இருக்க விரும்புகிறேன். ஏனெனில் நான் எப்பொழுது நதியைக் கடக்க வேண்டுமென்று எனக்குத் தெரியாது. அவர் என் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஆண்டவரே, என்னை விட்டுச் சென்றுவிடாதேயும். நீர் சென்றுவிட்டால் என்னால் பேச முடியாது. என்னால் பிரசங்கம் செய்யமுடியாது. என்னால் காட்டிலே வேட்டையாட முடியாது. என்னால் கரையில் மீன் பிடிக்க முடியாது, என்னால் கார் ஓட்ட முடியாது. உம்மையன்றி என்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீரே என் வழிகாட்டி. இந்த எல்லா விவகாரங்களிலும் நீர் என்னை எவ்வாறு வழிநடத்தி வந்திருக்கிறீர் என்றும், என்னை எவ்வாறு இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர் என்றும் இச்சபையோருக்கு எடுத்துக் கூற எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன்! சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தெருவில் நின்று கொண்டு இவ்வாறு யோசனை செய்து கொண்டிருந்தேன். என் குடும்பத்தினர் தவறு செய்த காரணத்தால் யாரும் என்னுடன் பேசமாட்டார்கள். நான் தனிமையில் இருந்தேன். யாருமே என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. “அவன் தந்தை கள்ளச் சாராயம் விற்பவன்” என்று என்னை ஏளனம் செய்தனர். ஆண்டவரே, அதன் காரணமாக யாரும் என்னுடன் பேச விரும்பவில்லை. எனக்கோ ஜனங்கள் என்றால் அதிக பிரியம். ஒரு நாள் அந்த கம்பியை நான் இறுகப் பிடித்துக் கொண்டேன். இன்றைக்கோ, ஆண்டவரே, சற்று இளைப்பாற நான் மெள்ள காட்டுக்கு நழுவிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. யார் அப்படி செய்தது? என்னுடைய தனிப்பட்ட திறனல்ல, அல்லது என் கல்வியல்ல. எனக்கு கல்வி கிடையாது. ஆண்டவரே, நீர் தாம் அவ்வாறு செய்தீர். நீர் என் குறியை சரியாக அமைத்து கொடுத்தீர். நான் பெரிய மீன்களைப் பிடிக்கும் படி நீர் செய்தீர். ஏனெனில் அவ்வாறு செய்ய எனக்கு விருப்பமென்று உமக்குத் தெரியும். நீர் எனக்குத் தந்தைமார்களையும், தாய்மார்களையும், கொடுத்தீர். நீர் எனக்கு சகோதரர்களையும், சகோதரிகளையும் கொடுத்தீர். உடல் நலனையும் தந்திருக்கிறீர். எனக்கு மனைவியையும், குடும்பத்தையும், தந்திருக்கிறீர். ஆண்டவரே, நீரே என் வழிகாட்டி. உமது கையை நான் பிடித்துக் கொள்ளட்டும். அதை விட்டுவிட அனுமதியாதேயும். ஒரு கை களைப்படைந்தால், நான் கை மாற்றி, மறு கையினால் பிடித்துக் கொள்வேன். ஆண்டவரே, உதவி செய்யும். 93ஆண்டவரே, இங்குள்ள ஒவ்வொருவரும் அந்த ஜீவ கம்பியாகிய பரிசுத்த ஆவியைப் பிடித்துக் கொள்வார்களாக! அவரே எங்களுக்கு ஜீவனும், எங்களுக்கு ஜீவனையளிக்கும் ஆதாரமுமாய் இருக்கிறார். மேலேயுள்ள அந்த மகிழ்ச்சிகரமான தேசத்துக்கு அவர் எங்களை வழிநடத்துவராக! அங்கு இவ்வாழ்க்கையில் காணப்படும் பிரயாசங்கள் இருக்காது. இவ்வுலகிலுள்ள எங்கள் பணி அப்பொழுது முடிவடைந்திருக்கும். அங்கு வயோதிபமோ, பலவீனமானவர்களோ கிடையாது. களைப்புறும் இரவுகள் அழுது ஜெபித்தல், பீட அழைப்புகள் அங்கு இருக்காது. அங்கு நாங்கள் எக்காலத்தும் இளமையாக இருப்போம். வியாதியும், துன்பமும் அங்கு ஒருபோதும் இராது. அங்கு பாவம் என்பதே கிடையாது. வரப் போகும் காலங்கள் அனைத்திலும், நித்திய காலமாக தாங்கள் தேவனுடைய நீதியைக் கொண்டவர்களாய் வாழ்ந்து கொண்டிருப்போம், பிதாவே, இதை அருள்வீராக! இப்பொழுதும் பிதாவே, அந்த ஜீவ கம்பியைப் பிடித்துக் கொள்ளாதவர் யாராகிலும் இன்றிரவு இங்கிருந்தால், அதை இப்பொழுதே கண்டு பிடித்துக் கொள்வார்களாக. வழி நடத்தி வரும் அந்த பரிசுத்த ஆவியானவர்தாமே... என் கையை உமது வார்த்தையின் மேல் வைத்து, அவர் எப்பொழுதுமே சரியாக இருந்து வந்திருக்கிறாரென்று என் இருதயப் பூர்வமாக கூறமுடியும். நான் அநேக முறை தவறு செய்திருக்கிறேன். ஆனால் அவரோ ஒரு போதும் தவறு செய்ததில்லை. ஆண்டவரே அவர் என்னுடன் தங்கியிருக்கட்டும். நானும் அவருடன் தங்கியிருப்பேனாக. இன்றிரவு அவரை அறிந்திராத மற்றுள்ளோர் அவருடைய மாறாத கரத்தைப் பிடித்துக் கொண்டு, அவரால் வழிநடத்தப்படுவார்களாக. 94என்றாவது ஒரு நாள் நாங்கள் நதியில் வர வேண்டிவர்களாயிருக்கிறோம். அந்த காலையிலும் கூட மூடுபனி நிறைந்திருக்கும். அந்த யோர்தான் நதி கொந்தளித்து, அலைகள் மோதி, மரணம் எங்கள் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும். ஆனால் தேவனே, நான் பயப்படமாட்டேன் போர் சேவகன் என்னும் முறையில் என் தலைச்சீராவை நான் கழற்றி வைத்து, அந்த பாதையை பின் நோக்கி, அந்த கம்பி என்னை எங்கு வழி நடத்திக் கொண்டு வந்துள்ளது என்பதைக் காண்பேன். அந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு நான் கடந்து வந்த வனாந்தரம் அனைத்தையும், முள் பாதைகளையும், எனக்கு காயம் உண்டாக்கின அந்த கற்குவியல்களையும், ஆனால் இவையனைத்தின் மத்தியிலும் கம்பியை விடாமல் நான் பிடித்துக் கொண்டு வந்த அந்த பாதையை நோக்குவேன். அந்த கவிஞன் கூறின விதமாக, “சிலர் தண்ணீர்களைக் கடந்து வருகின்றனர். சிலர் வெள்ளத்தைக் கடந்து வருகின்றனர், சிலர் ஆழமான சோதனைகளைக் கடந்து வருகின்றனர்'', ஆனால் எல்லோருமே இரத்தத்தைக் கடந்து வரவேண்டும். என்னை இந்த வாழ்க்கை பாதையில் பாதுகாத்து வந்த அந்த பட்டயத்தை உறையில் போட்டு, ”பிதாவே, இன்று காலை கப்பலை அனுப்பும், நான் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூச்சலிடுவேன். ஆண்டவரே, அங்கு நீர் இருப்பீர் அவ்வாறு நீர் வாக்களித்திருக்கிறீர். நீர் ஒரு போதும் தவறுதில்லை. இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆசிர்வதியும். இது வரைக்கும் அந்த கம்பியை அவர்கள் தொடாமலிருந்து அதை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் அறியாமலிருந்தால், அவர்கள் இப்பொழுதே விருப்பமுள்ள தங்கள் கரங்களை உயர்த்தி, அந்த ஜீவ கம்பியைப் பிடித்துக் கொள்ள அருள்புரிவீராக! அது அவர்களுடைய இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றி, கிறிஸ்துவுக்குள் பரிபூரண சமாதானத்தையும் திருப்தியையும், இளைப்பாறுதலையும் அருளும். 95நாம் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில், யாராகிலும் ஒருவர் கையுயர்த்தி, “என் கையைப் பிடித்துக் கொள்ளும்'' என்று சொல்வீர்களா? ஓ, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. என் வழி இருண்டு போகும் நேரத்தில், விலையேறப்பெற்ற ஆண்டவரே என் அருகில் இரும் என் ஜீவன் ஏறக்குறைய போய் விட்டு, நான் நதியில்நிற்கும் போது என் பாதங்களை வழிநடத்தி என் கையைப் பிடித்து விலையேறப்பெற்ற ஆண்டவரே, என்னை வழிநடத்திச் செல்லும். வேறு யாராகிலும் ஒருவர் கையுயர்த்தி, “ஆண்டவரே, இன்றிரவு ஜீவக் கம்பியை தொட்டு உணர விரும்புகிறேன். கிறிஸ்து என் பாவங்களை மன்னித்துவிட்டாரென்று நான் உணர விரும்புகிறேன். இந்த மணி நேர முதல் நான் புது சிருஷ்டியாயிருக்க விரும்புகிறேன்'' என்று கூறுவீர்களா? கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. வேறு எயாராகிலும் ஒருவர், ”ஆண்டவரே, உம்மை நான் தொடட்டும். என்னை நான் இழக்க விரும்புகிறேன். சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக'', என்னை நான் இழந்து, ஆண்டவரே, உம்மில் என்னை கண்டடையட்டும். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக என்னை நான் இழக்கட்டும், என்னை நான் மறக்கட்டும். “சகோதரனே, காத்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக... ''நான்... சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக”, என் அறிவு, எல்லாவற்றையும் நான் இழக்கட்டும். சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை நம்பவேண்டாம். வழிகாட்டியைப் பின்பற்றுங்கள். அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். “கர்த்தராகிய இயேசுவே, என்னை நடத்தும், என்னை நடத்தும்”, அங்கே பின்னால் உள்ள உன்னைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஓ, இரட்சிப்பை விரும்பி அநேக கைகள் உயர்த்தப்பட்டன... இங்கு பீட அழைப்பு கொடுக்க முடியாது. ஏனெனில் அதைச் சுற்றி ஜனங்கள் அமர்ந்துள்ளனர். ஆனால் அவர் இங்கே நம் மத்தியில் இருக்கிறார். உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தின போது, உங்கள் இருதயங்களில் ஏதோ ஒன்று ஏற்பட்டதென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு'' என்று இயேசு கூறியுள்ளார். (யோவான் 5:24). அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் தண்ணீர் நிறைந்த குளம் இங்குள்ளது. ஞானஸ்நான ஆதாரனைக்கு இன்னும் அதிக நேரம் உள்ளது. நாம் ஜெபம் செய்வோம். 96பரலோகப் பிதாவே, கரகரப்பான தொண்டையைக் கொண்டு அளிக்கப்பட்ட இந்த சிறு செய்தியின் காரணமாக, பரிசுத்த ஆவியானவர் எங்கோ சென்றார். அவர் எங்கு செல்ல வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்ததோ அங்கு சென்றார். ஆண்டவரே, அநேகர் பதினைந்து அல்லது இருபது பேர் தங்கள் கைகளையுயர்த்தி அவர்களுக்கு வழிகாட்டி தேவையென அறிவித்தனர். அவர்கள், “நான் சரியாயிருக்கிறேன்'' என்று நினைத்துக் கொண்டு இதுவரைக்கும் தங்களை ஏமாற்றிக் கொண்டு வந்தனர் என்பதை உணருகின்றனர், ஆனால் அவர்கள் இருதயத்தின் ஆழத்தில் அவர்கள் சரியாயில்லையென்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆண்டவரே, அவர்கள் உம்மைத் தொட்டு உணர விரும்புகின்றனர். அவர்கள் வழிகாட்டியைப் பெற விரும்புகின்றனர். இந்த பயணத்தை மேற்கொள்ள அவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகின்றனர். எந்த நேரத்திலும் வண்டி நிறைந்து இடமேயில்லையென்பது உமக்குக் கிடையாது. அந்த இடத்தை எப்படி அடைய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியாது. உம்மைத் தவிர வேறு யாருக்கும் அவர்களை அங்கு கொண்டு செல்லத் தெரியாது. உமக்கு மாத்திரமே அது தெரியும். தேவனால் அருளப்பட்ட வழிகாட்டியாகிய பரிசுத்த ஆவிக்காக அவர்கள் வருகின்றனர். அதற்கு அடையாளமாக அவர்கள் கைகளையுயர்த்தினர். 97பரிசுத்த ஆவியானவரும் வழிகாட்டியுமானவரே அவர்கள் மேல் இறங்கும். எல்லா பாவங்களையும் மன்னியும். அவர்கள் அக்கிரமங்களை மன்னியும். இன்றிரவு கிறிஸ்துவின் சரீரத்தில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும். அங்கு, யோர்தானுக்கு அவர்களை வழிநடத்திச் செல்லும் அந்த மின்சாரக் கம்பியின் மூலம், தேவனுடைய மின்சாரம் பாய்வதை உணர்ந்து கொள்வார்கள். அது அவர்களை யோர்தானைக் கடக்கச் செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள தேசத்துக்கு கொண்டு சேர்க்கும். வார்த்தையை அவர்கள் நேரடியாக பின்பற்ற அருள்புரியும், ''மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று உம்முடைய வார்த்தை உரைக்கிறது. வேறெந்த வழியிலும் அவர்கள் முயற்சி செய்யாமல் இருப்பார்களாக, அவர்கள் நேரடியாக வார்த்தையை பின்பற்றட்டும். அவர் ஒருவரே அவர்களை வழிநடத்துவார். வழிகாட்டியையடைய அவர்கள் இந்த படிகளில் தான் ஏறிச்செல்ல வேண்டும் ஆண்டவரே, இதை அருளும். அவர்கள் உம்முடையவர்களாயிருக்க அருள்புரியும். அவர்கள் உம்முடைய கரங்களில் விருதுகளாக இருக்கின்றனர். யாரும் உம்முடைய கரங்களிலிருந்து அவர்களைப் பறித்துக் கொள்ள முடியாது. அவர்களை இரட்சிக்கப்பட்ட ஜனங்களாக நீர் கொண்டு செல்வீரென்று நம்புகிறேன். ஏதாவதொன்று அவர்களுடன் பேசாமல் அவர்கள் தாங்களாகவே கைகளையுயர்த்தியிருக்க முடியாதென்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவரும் வழிகாட்டியுமாகிய நீரே அவர்களுடன் பேசினீர். காலம் முடிவுபெறும் தருணத்தில் இருப்பதையும் மூடுபனி பூமியின் மேல் இறங்குவதையும், மகத்தான ஸ்தாபம்னங்கள் அனைத்தும் ஒன்று கூடுகிறதையும் அவர்கள் காண்கின்றனர். ஓ, தேவனே, அவர்கள், “விசித்திரமாக நடந்து கொள்பவர் அனைவரும் இங்கிருந்து அலாஸ்காவுக்குச் செல்லவேண்டும்” என்கின்றனர். இந்த அவர்களுடைய பயமுறுத்தல் எங்களுக்குப் புதிதல்ல. அந்த மகத்தான வழிகாட்டி ஏற்கனவே இவைகளை வார்த்தையில் எங்களுக்குக் காண்பித்திருக்கிறார். நாங்கள் இப்பொழுது அந்த கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். பிதாவே, தேவனே, இன்றிரவு அவர்களுடன் நீர் பேசினீர். அவர்களை வார்த்தையின் விருதுகளாக உமக்குத் தருகிறேன். இயேசுவின் நாமத்தில். 98இப்பொழுது மேசையின் மேல் உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை வியாதியஸ்தர்களுக்காக, இவை ஒரு சிறு குழந்தைக்காகவோ, அல்லது தாய்க்காகவோ, சகோதரிக்காகவோ, சகோதரனுக்காகவோ வைக்கப்பட்டுள்ளன. தலைமயிர் ஊசிகளும் (hair pins) கூட அதில் குத்தப்பட்டுள்ளன. அவைகளை என் அருகில் பிடித்துக் கொண்டிருக்கிறேன். பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களும் கச்சைகளும் எடுக்கப்பட்டனவென்றும், ஜனங்கள் சுகமடைந்தனர் என்றும், அசுத்த ஆவிகள் ஜனங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றன என்றும் நாம் வேதாகமத்தில் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவரே பவுல் சாதாரண மனிதன் என்று நாங்கள் உணருகிறோம். ஆனால் அவன் மேல் தங்கியிருந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்த உறுமால்களை ஆசிர்வதித்தது. ஜனங்களும் அவன் உம்முடைய அப்போஸ்தலன் என்பதை விசுவாசித்தனர். பவுல் எங்கள் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டான். ஆனால் வழிகாட்டியோ எடுக்கப்படவில்லை. அவர் இன்னமும் இங்கிருக்கிறார். தேவனே, இந்த உறுமால்களை ஆசீர்வதித்துத் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். வழிகாட்டி அவர்களை, தங்களை பரிபூரணமாக அர்ப்பணிக்கும் நிலைக்கு வழி நடத்துவாராக. 99இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வழி காட்டியைப் பின் தொடர்ந்த போது, சிவந்த சமுத்திரத்தையடைந்தனர், அவர்களுடைய கடமையை அவர்கள் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் தடுக்கப்பட்டனர். வழிகாட்டி அவர்களை சமுத்திரத்தண்டையில் நடத்தினார். ஏன்? தமது மகத்துவத்தைக் காண்பிக்க, எல்லா நம்பிக்கையும் அற்ற பின்பு தேவன் அக்கினி ஸ்தம்பத்தின் வழியாக கீழே நோக்கிப் பார்த்தார். அந்த சிவந்த சமுத்திரம் பயந்து போய், உருண்டு ஓரிடத்தில் நின்றது. இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்காக சிவந்த சமுத்திரதின் வழியாக ஒரு பாதை வகுத்துக் கொடுக்கப்பட்டது. ஆண்டவரே, உண்மையாக நீர் அதே தேவனாக, மாறாதவராக இருக்கிறீர். இந்த ஜனங்கள் ஒருக்கால் கிறிஸ்தவர்களாக இருந்து, தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் வியாதியோ அவர்களை இந்த மூலைக்குக் கொண்டு வந்துவிட்டது. இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் கீழே நோக்கிப் பாரும். அப்பொழுது பிசாசு பயந்து போய் பின்னடைவான். அப்பொழுது உமது பிள்ளைகள் கடந்து சென்று சுகம் என்னும் வாக்குத்தத்தத்தை அடைவார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சரீரத்திலிருந்து அவர்கள் சரீரங்களுக்கு இவைகளை அனுப்புகிறேன். 100இந்த சபையோரை உமக்கு முன்பாக உயர்த்துகிறேன். விசுவாசத்தின் மூலம் அவர்களை பரலோகத்திலுள்ள மகத்துவமான தேவனுடைய பலிபீடத்தண்டைக் கொண்டு செல்கிறேன். தேவனே, அவர்களுடைய வியாதிகளையும், அவர்களுடைய வாழ்க்கையில் காணப்படும் தவறுகள் அனைத்தையும் சுத்திகரித்து, அவர்களை உம்முடையவர்களாக்கிக் கொள்ளும். பிதாவே, அவர்களை சுகமாக்கும். இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பின அந்த வல்லமை சாவுக்கேதுவான இவர்களுடைய சரீரங்களை உயிர்ப்பித்து, கிறிஸ்துவுக்குள் அவர்களைப் புது சிருஷ்டிகளாக மாற்றட்டும். உம்மை சேவிக்க அவர்களுக்கு நல்ல சுகத்தையும் பெலனையும் தாரும். ஆண்டவரே, என்னை நினைவு கூரும். நான் உமது தாசன். எனக்குதவி செய்யும். எனக்கு ஜெபம் அவசியம். பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களை வழிநடத்தி, எங்களை உபயோகித்து, எடுத்துக் கொள்ளப்படுதலில் அவருடைய மகத்தான வருகையின் போது, ஆகாயத்தில் நாங்கள் அவரை முகமுகமாய் சந்திக்கும் வரை, எங்களை வழிநடத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். கிறிஸ்துவின் நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென். 101நான் அவரை நேசிக்கிறேன் நான்... (நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?) முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் நீங்கள் காணும் ஒருவரிலொருவர் அன்பு கூராவிட்டால், காணாத அவரிடத்தில் எப்படி நீங்கள் அன்பு கூர முடியும்? இப்பொழுது நாம், நான் அவரை நேசிக்கிறேன். என்னும் பாடலைப் பாடும் போது, அடுத்துள்ளவரிடம் மனமுவந்த அன்புடன் கைகுலுக்குவோம். நான் அவரை நேசிக்கிறேன் (சகோ. பிரான்ஹாம் சுற்றியுள்ளவரிடம் கைகுலுக்கி, “சகோ. நெவில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக'', என்கிறார் - ஆசி). (சபையோர் தொடர்ந்து பாடுகின்றனர்) கல்வாரி மரத்தில். இப்பொழுது நமது கரங்களை அவரிடம் உயர்த்துவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 102இப்பொழுது ஒரு நல்ல பாடலைக் கேட்க விரும்புகின்றீர்களா? இந்தியானாவிலிருந்து வந்துள்ள சுவிசேஷ பாடல்களை நடத்துபவர் (Evangelist Song Leader) நம் மத்தியில் உள்ளார். அவர் காடில் கூடாரத்தில் பாடுகிறார் என்று நினைகிறேன், அப்படித்தானே? அவர் காடில் கூடாரத்தைச் சேர்ந்தவர். எத்தனை பேருக்கு ஹாவர்ட் காடிலைத் தெரியும்? ஓ, என்னே தேவன் அவருடைய ஆத்துமாவை இளைப்பாறச் செய்வாராக. மற்றவர் பாடுவதைக் காட்டிலும், திருமதி காடில், இன்று காலை உன் அறையை விட்டு செல்லும் முன்பு நமது இரட்சகராசிய கிறிஸ்துவின் நாமத்தில், ஜெபித்து, ''அவரை இன்று கேடகமாக்கிக் கொள்ள நினைத்தாயா?“ என்ணும் பாடலைப் பாடுவதைக் கேட்க எனக்கு மிகுந்த ஆவல். 103அந்த தெருவின் மறுபக்கத்தில் ஒரு நாள் இரண்டு அறைகளுள்ள ஒரு சிறு மரவீட்டில், நான் எழுந்து அடுப்பு பற்ற வைத்துக் கொண்டிருந்தேன். அடுப்பு எரியவேயில்லை. ஒவ்வொருமுறை நான் பற்றவைக்க முயன்ற போதெல்லாம் காற்று பலமாக அடித்து அதை அணைத்துவிட்டது, அன்று மிகவும் குளிராயிருந்தது. நான் விறைத்துப் போகும் நிலையில் இருந்தேன். தரையில் பனி பெய்திருந்தது. நான் வெறுங்காலில் இருந்தேன், அந்த பழைய தகர அடுப்பை பற்ற வைக்க முயன்று கொண்டிருந்தேன்... மேடாவுக்கும் எனக்கும் விவாகமாகி சில நாட்கள் மாத்திரமே கழித்திருந்தன. மரம் ஈரமாயிருந்ததால் அடுப்பு எரியவேயில்லை. நான் அங்கு அமர்ந்து கொண்டு, “ஓ, என்னே! நான் மறுபடியும் முயற்சி செய்வேன் என்று எண்ணினேன். நாளை வேலைக்குச் செல்லவேண்டும். அந்த அடுப்புக்கு காற்று வீசிக் கொண்டிருந்தேன். அப்போழுது நான் ரேடியோவைப் போட்டவுடன், அந்த அம்மாள், இன்று காலை உன் அறையை விட்டுசெல்லும் முன்பு, நமது இரட்சகராகிய கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபித்து, அவரை இன்று கேடகமாக்கிக் கொள்ள நினைத்தாயா? என்று பாடின பாடலைக் கேட்டேன். நான் அப்படியே தரையில் விழுந்துவிட்டேன். அவர்கள் பாடும் பாடலைக் கேட்க எனக்கு எவ்வளவு ஆவல். 104என்றாவது ஒரு நாள் நான் நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்லும் போது, திருமதி காடில் அங்கு அமர்ந்து கொண்டு பாடும் பாடலைக் கேட்பேன் என்று நம்புகிறேன். நதியின் இப்புறம் எப்பொழுதுமே பசுமையான மரம் ஜீவவிருட்சம் உள்ளது. நதிபுறத்தில் இரவும் பகலும் தூதர்களின் பாடல் குழு பாடிக் கொண்டிருக்கும் அங்கு இரவு என்பதே கிடையாது. எனவே அவர்கள் நாள் முழுவதும் பாடிக் கொண்டிருப்பார்கள். நான் அவ்விடத்தையடைந்து, ஓரிடத்தில் அமர்த்து, அவர்கள் பாடும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அங்கு திருமதி காடில் பாடுவதையும் கேட்பேன் என்று நம்புகிறேன். கர்த்தர் நமது சகோதரனை ஆசீர்வதிப்பாராக! அவருடைய பெயரை மறந்துவிட்டேன். சகோதரனே பெயர், என்ன? சகோ. நெட் உல்மன் இப்பொழுது உங்களுக்காக பாடுவார். சகோ. உல்மன், இன்றிரவு எங்கள் மத்தியில் நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. (சகோ. உல்மன், “என் இருதயத்தின் ஆலயம்” என்னும் பாடலைப் பாடுகின்றார் - ஆசி)